in

திருவேடகம் அருள்மிகு ஏடகநாதர் திருக்கோவிலில் தெப்ப திருவிழா நடைபெற்றது

திருவேடகம் அருள்மிகு ஏடகநாதர் திருக்கோவிலில் தெப்ப திருவிழா நடைபெற்றது

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருவேடகம் ஏழவார் குழலி சமேத ஏடகநாதர் சுவாமி திருக்கோவிலில் 33 ஆம் ஆண்டு தெப்பத் திருவிழா விமர்சையாக நடைபெற்றது

விழாவையொட்டி காலை சுவாமி மற்றும் அம்பாள் திருக்கோவிலில் இருந்து பிரம்ம தீர்த்த தெப்பத்திற்கு அழைத்து வரப்பட்டது தொடர்ந்து சிறப்பு அபிஷேகங்கள் அர்ச்சனைகள் செய்யப்பட்டது மதியம் மாபெரும் அன்னதானம் நடைபெற்றது.

தொடர்ந்து சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அர்ச்சனைகள் அபிஷேகங்கள் செய்யப்பட்டு மின் அலங்காரத்தில் சுவாமியும் அம்பாளும் ரதவீதிகளில் வலம் வந்து அருள்பாளித்தனர்.

இதில் திருவேடகம் சோழவந்தான் மேலக்கால் தேனூர் மற்றும் மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சார்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

What do you think?

கோயில் அருகே யாசகர் படுகொலை.

நெல்லை நெல்லையப்பர் திருக்கோவில் தைப்பூச திருவிழா தெப்ப உற்சவம் விமர்சையாக நடைபெற்றது