in

கோவாவில் தேசிய அளவில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில் பதக்கங்களை வென்ற வீரர்களுக்கு தேனியில் உற்சாக வரவேற்பு

கோவாவில் தேசிய அளவில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில் பதக்கங்களை வென்ற வீரர்களுக்கு தேனியில் உற்சாக வரவேற்பு

கோவாவில் கடந்த 27-12 – 2025 முதல் 4. 01-2026 வரை தேசிய அளவிலான சிலம்பம் போட்டி நடைபெற்றது .இந்த சிலம்ப போட்டியில் 18 மாநிலங்களை சேர்ந்த சிலம்ப வீரர்கள் பங்கேற்றனார் .இதே போல் தேனி மாவட்டம் அரண்மனை புதூரை சேர்ந்த தேனி சிலம்பம் பாண்டி பயிற்சி மையத்தின் சிலம்ப வீரர்கள் பங்கேற்றனர்.

மேலும் தேசிய அளவில் நடைபெற்ற இந்த சிலம்ப போட்டியில் தேனி சிலம்பம் பாண்டி பயிற்சி மையத்தின் வீரர்கள் 8 தங்கப்பதக்கங்களையும், 2 வெள்ளிப்பதக்கங்களையும் இரண்டு வெண்கல பதக்கங்களையும் வென்று சாதனை படைத்தனர்.

தேனி மாவட்டத்திற்கு மட்டுமில்லாமல் தமிழகத்துக்கு பெருமை சேர்த்த சிலம்ப வீரர்களுக்கு அரண்மனைபுதூர் தேனி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் சார்பில் ஆர்வத்துடன் பங்கேற்று தேனிக்கு வருகை புரிந்த சிலம்ப வீரர்களுக்கு திலகம் மிட்டு வான வேடிக்கையுடன் சிறப்பான முறையில் வரவேற்றனார்.

சிலம்பம் பாண்டி.சிலம்பம் கண்ணன் சிலம்பம் கவிதா ஆகியோர் சிலம்ப பயிற்சியினை மேற்கொண்டனர் .மேலும் இந்த சிலம்ப போட்டியில் சிலம்ப வீரர்கள், குமரன் ,செந்தமிழ் ,நிகரமைவன், மோகன் சாய் ,பூர்வபூஜிதன், நேஷ்வந்த்மித்ரன், இனியன்பால், முகிலன், மோகன்தாஸ் ,குருபிரியன் ,இதயன்ராய் ,லோகநிவாஷ் ,ஆகிய சிலம்ப வீரர்கள் இந்த போட்டியில் பங்கேற்று சாதனை படைத்தனார்.

What do you think?

ஸ்பை த்ரில்லர் (Spy Thriller) வசூல் மழை கொடுத்த படம் ‘துராந்தர்’ 

நெல்லிதோப்பு சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த 10,000 குடும்பங்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்வின் துவக்க விழா