in

தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் மூவர்ண கொடியினை ஏற்றி மரியாதை

தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் மூவர்ண கொடியினை ஏற்றி மரியாதை

 

79 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் மூவர்ண கொடியினை ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

பல்வேறு துறைகளில் இருந்து 47 பயனாளிகளுக்கு 67,60,539 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் துறை ரீதியாக சிறப்பாக செயல்பட்ட நபர்களுக்கு பாராட்டு சான்றுகளையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

நாடு முழுவதும் 79 ஆவது சுதந்திர தின விழா கோலாலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக தேனி மாவட்டத்தில் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் மூவர்ண தேசிய கொடியினை ஏற்றி வைத்து மூவர்ண பலூனை பறக்கவிட்டு காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

அதன் பின்னர் துறை ரீதியாக சிறப்பாக செயல்பட்ட அரசுத்துறை அதிகாரிகளுக்கு பாராட்டு சான்றுகளையும் பதக்கங்களையும் வழங்கினார்.

மாற்றுத்திறனாளிகள் வேளாண் வருவாய் கூட்டுறவு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மூலம் 47 பயனாளிகளுக்கு சுமார் 67,60,539 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட கண்காணிப்பாளர் சினேகா பிரியா உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் முன்னாள் ராணுவ வீரர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்தினர்.

What do you think?

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தலைக்கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு பேரணி

புதுச்சேரி வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் ஆலய ஆடிப்பெரு விழா தேரோட்டம்