உலகின் முதல் நடராஜர் விக்ரகம் அழகிய கூத்தர் திருக்கோவில் கொடியேற்றம்
உலகின் முதல் நடராஜர் அமைந்திருக்கும் நெல்லை மாவட்டம் செப்பறை அழகிய கூத்தர் திருக்கோவில் ஆனி உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாவி தரிசனம் செய்தனர்.
உலகின் முதல் நடராஜர் விக்ரகம் அமையப்பட்டுள்ள நெல்லை மாவட்டம் ராஜமல்லிபுரம் அடுத்த செப்பறை அழகிய கூத்தர் திருக்கோவில் ஆனி உற்சவம் இன்றைய தினம் கொடியேற்றத்துடன் வெகு விமர்சையாக தொடங்கியது.
இதனை ஒட்டி கோவில் நடை அதிகாலை திறக்கப்பட்டு சுவாமி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது தொடர்ந்து பொடி பட்டம் பல்லக்கில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது தொடர்ந்து திருவிழா கொடியேற்றம் மேளதாளம் முழங்க வெகு விமர்சையாக நடைபெற்றது.
பின்னர் கொடி மரத்திற்கு பால் மஞ்சள் இளநீர் உள்ளிட்ட பல்வேறு அபிஷேக திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடந்தது.
பின்னர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய அழகிய கூத்தர் சுவாமிக்கும் மகா தீபாராதனை நடந்தது.
இவ்விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேர் திருவிழா வரும் ஜூலை 1ம் தேதியும் ஆனி உத்திர அபிஷேகம் ஜூலை இரண்டாம் தேதியும் நடைபெற உள்ளது