in

சூர்யாவோட 47-வது படத்தோட வேலைகள் சூடுபிடிக்க ஆரம்பிச்சிருக்கு


Watch – YouTube Click

சூர்யாவோட 47-வது படத்தோட வேலைகள் சூடுபிடிக்க ஆரம்பிச்சிருக்கு

 

நம்ம சூர்யாவோட 47-வது படத்தோட வேலைகள் இப்போ சூடுபிடிக்க ஆரம்பிச்சிருக்கு.

சமீபத்துல தான் இந்த படத்தோட பூஜை சென்னையில ரொம்ப கிராண்டா நடந்துச்சு. ‘ஆவேஷம்’ படம் மூலமா இந்திய சினிமாவையே திரும்பிப் பார்க்க வச்ச மலையாள டைரக்டர் ஜித்து மாதவன் தான் இந்தப் படத்தை இயக்குறாரு.

படத்துல சூர்யா கூட சேர்ந்து ‘பிரேமலு’ புகழ் நஸ்லேன் மற்றும் ரொம்ப இடைவெளிக்குப் பிறகு நஸ்ரியா முக்கிய ரோல்ல நடிக்கிறாங்க.

டிரெண்டிங் மியூசிக் டைரக்டர் சுஷின் ஷ்யாம் தான் இந்த படத்துக்கு இசையமைக்கிறாரு.

இந்த படத்தைப் பத்தி நடிகை நஸ்ரியா இப்போ ஒரு சூப்பர் அப்டேட் கொடுத்திருக்காங்க:

“ஜித்து மாதவன் சார் வச்சிருக்கிற கதைக்களம் ரொம்ப புதுசாவும், பயங்கர விறுவிறுப்பாவும் இருக்கு. கண்டிப்பா இது ரசிகர்களுக்கு ஒரு செம விருந்தா அமையும்.

சூர்யா சார் கூட வொர்க் பண்றது எனக்கு ரொம்ப பெருமையாவும், உற்சாகமாவும் இருக்கு,” -னு சொல்லிருக்காங்க.

ஆவேஷம்‘ படத்துல ஒரு மாஸ் எனர்ஜியைக் கொடுத்த ஜித்து மாதவன், இப்போ சூர்யாவை வச்சு என்ன மாதிரி ஒரு மேஜிக் பண்ணப்போறாருன்னு தமிழ் சினிமாவே ஆவலா காத்துட்டு இருக்கு.

What do you think?

மலையாள திரையுலகின் ஒரு படைப்பாளி நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார்

ஆத்விக் செமயா டான்ஸ் ஆடுறாரே… சோஷியல் மீடியால செம ட்ரெண்டிங்!