in

மயிலாடுதுறை வதான்யேஸ்வரர் ஆலயத்தின் திருக்கல்யாண உற்சவம்

மயிலாடுதுறை வதான்யேஸ்வரர் ஆலயத்தின் திருக்கல்யாண உற்சவம்

 

மயிலாடுதுறை வதான்யேஸ்வரர் ஆலயத்தின் திருக்கல்யாண உற்சவம், தருமபுரம் ஆதீனம் உள்ளிட்ட திரளான பக்தர்கள் வழிபாடு.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் காவிரி ஆற்றை மையப்படுத்தி ஐப்பசி மாதத்தில் கொண்டாடப்படும் துலா உற்சவம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும் 10 நாள் உற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான திருக்கல்யாண உற்சவம் நேற்று நடைபெற்றது.

இதனையொட்டி, சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து, யாகசாலை மண்டபத்திற்கு சுவாமி மற்றும் அம்பாள் எழுந்தருளினர்.

அங்கு வேதியர்கள் யாகம் வளர்த்து, வேதமந்திரங்கள் முழங்க,பெண்கள் சீர்வரிசை எடுத்து வந்து மாலை மாற்றுதல் மற்றும் மாங்கல்யதாரணம் நடைபெற்று,திருமண வைபவம் நடைபெற்றது.

இதில் தருமபுர ஆதீனம் மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.

தொடர்ந்து இரவு சுவாமி மற்றும் அம்பாள் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு முன்பு சிவன் கோமாதா வடிவிலும் பின்னே வேல் போன்ற அம்மன் சூலாயுதம் வடிவிலான பல்லக்கில் எழுந்தருளி வீதியுலா நடைபெற்றது வீடுகள் தோறும் பக்தர்கள் தீபாராதனை எடுத்து வழிபட்டனர்.

What do you think?

தருமபுரம் ஆதீனத்தை சந்தித்து ஆசிபெற்ற ரஷ்யா கஜகஸ்தான் நாட்டினர்

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை வரவேற்க்க தயாராகும் பிரம்மாண்ட கேக்