வினை தீர்த்த வேட்டை பெருமாள் திருக்கல்யாண உற்சவம்
வீடூர் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ வினை தீர்த்த வேட்டை பெருமாள் திருக்கல்யாண உற்சவம். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டம் வீடூர் கிராமம் ஸ்ரீ வினைதீர்த்த வேட்டைபெருமாள் ஆலய மண்டல அபிஷேக விழாவை முன்னிட்டு திருக்கல்யாணம் உற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
முன்னதாக ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் திருக்கல்யாண நிகழ்ச்சிக்கு தேவையான அனைத்து சீர்வரிசை தட்டுகளும் வைக்கப்பட்டு விழா பந்தல் அருகே சிறப்பு யாகங்கள் நடைபெற்றன.
பின்னர் மேள தாளங்கள் முழங்க மாப்பிள்ளை அழைப்பு நடைபெற்றது. தொடர்ச்சியாக ஸ்ரீதேவி, பூதேவி உடனாகிய ஸ்ரீ வினைதீர்த்த வேட்டைபெருமாள் சுவாமிகளுக்கு கங்கணம் கட்டும் நிகழ்வும், தொடர்ச்சியாக மாலை மாற்றும் நிகழ்வு நடைபெற்ற பிறகு திருக்கல்யாண நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
அதன் பின்னர் சுவாமிக்கு பால், பழம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று மகா தீபாராதனை நடைபெற்றது.

திருக்கல்யாண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும், அறுசுவை உணவு வழங்கப்பட்டது.


