in

மீண்டும் இணையும் ‘விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா’ ஜோடி


Watch – YouTube Click

மீண்டும் இணையும் ‘விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா’ ஜோடி

 

விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா.. இவங்க ரெண்டு பேரோட காம்போனாலே ரசிகர்களுக்கு தனி குஷிதான்!

‘கீதா கோவிந்தம்’ படத்துல ஆரம்பிச்ச இவங்களோட கெமிஸ்ட்ரி, இப்போ மூணாவது முறையா ஒரு பிரம்மாண்டமான கதையில இணையப் போகுது.

ரசிகர்கள் ரொம்ப நாளா ஆவலோட காத்துட்டு இருந்த ‘விஜய் – ராஷ்மிகா’ ஜோடி இப்போ திரும்பவும் வர்றாங்க. ஆனா இந்தத் தடவை ஒரு அழகான லவ் ஸ்டோரி மட்டும் இல்லாம, செம மாஸான வரலாற்றுப் பின்னணி (Period Drama) கொண்ட படத்தோட வர்றாங்க.இயக்குநர் ராகுல் சாங்கிரித்யான் இயக்கத்துல உருவாகுற இந்தப் படத்துக்கு ‘ரணபலி’-னு பவர்ஃபுல்லான பேர் வச்சிருக்காங்க.

இதோட ‘டைட்டில் கிளிம்ப்ஸ்’ (Title Glimpse) வீடியோ இப்போ ரிலீஸ் ஆகி சோஷியல் மீடியாவுல ட்ரெண்ட் ஆகிட்டு இருக்கு.ஏற்கனவே ‘கீதா கோவிந்தம்’, ‘டியர் காம்ரேட்’னு ரெண்டு படங்கள்ல இவங்க ஒண்ணா நடிச்சிருக்காங்க.

இப்போ ரொம்ப வருஷம் கழிச்சு, அதாவது ‘டியர் காம்ரேட்’ படத்துக்கு அப்புறம் இவங்க ரெண்டு பேரும் ஸ்கிரீன்ல ஒண்ணா வர்றது இதுதான் முதல் தடவை.

நிஜ வாழ்க்கையிலயும் இவங்க ரெண்டு பேரும் காதலிக்கிறாங்க, சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கப் போறாங்கன்னு அப்பப்போ நியூஸ் வந்துட்டே இருக்கு.

இந்த நேரத்துல இவங்க ஒண்ணா ஒரு படம் பண்றதுனால, படத்துக்கு செம ஹைப் ஏறியிருக்கு!படம் வர்ற செப்டம்பர் 11-ம் தேதி தியேட்டர்ல ரிலீஸ் ஆகப்போகுது.

வரலாற்றுப் பின்னணிங்கிறதுனால விஜய் தேவரகொண்டாவோட லுக் எப்படி இருக்கும்னு பாக்கவே ரசிகர்கள் ஆர்வமா இருக்காங்க.


Watch – YouTube Click Shorts

What do you think?

அனைத்து சனிக்கிழமைகளும் விடுமுறை அளிக்க கோரி புதுச்சேரியில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்

டி.என்.டி சமுதாயத்திற்கு ஒற்றைச் சான்றிதழ் வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றா ஆர்ப்பாட்டம்