in

பூம்புகாரில் வன்னிர் சங்க மகளிர் பெருவிழா மாநாடு பந்தக்கால் நடப்பட்டது

பூம்புகாரில் வன்னிர் சங்க மகளிர் பெருவிழா மாநாடு பந்தக்கால் நடப்பட்டது

 

பூம்புகாரில் வன்னிர் சங்க மகளிர் பெருவிழா மாநாடு பந்தக்கால் நடப்பட்டது. அன்புமணி ராமதாஸ் கலந்து கொள்வார் என எதிர்பார்கிறோம். அவர் கலந்து கொள்வதர்கான சூழல் ஏற்பட்டுள்ளது என பா.ம.க கௌரவ தலைவர் ஜி.கே.மணி பேட்டி.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பூம்புகாரில் பாட்டாளி மக்கள் கட்சியின் வன்னியர் சங்க மகளிர் மாநாடு ஆகஸ்ட் 10ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு மாநாட்டிற்கான பந்தக்கால் நடும் விழா இன்று நடைபெற்றது.

வன்னியர் சங்க மாநிலத் தலைவர் பு.தா.அருள்மொழி, பாட்டாளி மக்கள் கட்சியின் கௌரவ தலைவர் ஜி.கே.மணி பாட்டாளி மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் தொடர்பான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த பாட்டாளி மக்கள் கட்சியின் கௌரவ தலைவர் ஜி கே மணி கூறியதாவது

பாட்டாளி மக்கள் கட்சியின் வன்னியர் சங்கம் சார்பாக பூம்புகாரில் நடைபெறும் வன்னியர் சங்க மகளிர் பெருவிழா மாநாட்டில் மூன்று லட்சம் பெண்கள் கலந்து கொள்வார்கள்.

பெண்மையை போற்றவும் பெண்களுக்கு பாதுகாப்பான சூழல் ஏற்படுத்துவதை உறுதி செய்யும் வகையில் டாக்டர் ராமதாஸ் அவர்களின் தலைமையில் மாநாடு நடத்தப்பட உள்ளது.

மாநாட்டிற்கு அன்புமணி அவர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கிறோம். அவர் கலந்து கொள்வதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது. நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறோம் என தெரிவித்தார்.

What do you think?

டிஎஸ்பி சஸ்பெண்ட் செய்யப்பட்ட அடுத்த தினமே களைகட்டிய கள்ளச் சந்தை

நெல்லையப்பா் காந்திமதி அம்பாள் திருக்கோயில் ஆடிப்பூரத் திருவிழா ஆடி வளைகாப்பு