in

யாருக்கும் தெரியாத விவேக்கின் மறுபக்கம்! மேடையிலேயே கதறி அழுத குமரி முத்து!


Watch – YouTube Click

யாருக்கும் தெரியாத விவேக்கின் மறுபக்கம்! மேடையிலேயே கதறி அழுத குமரி முத்து!

சினிமால சிரிப்புக்கு மட்டும் இல்ல, வாரி வழங்குறதுலயும் நம்ம சின்னக் கலைவாணர் விவேக் ஒரு மாபெரும் வள்ளல்னு நிரூபிக்கிற ஒரு பழைய வீடியோ இப்போ சோசியல் மீடியாவுல வைரலாகி எல்லாரையும் கண் கலங்க வச்சிருக்கு.

மறைந்த நகைச்சுவை நடிகர் குமரி முத்து ஐயா, விவேக் செஞ்ச ஒரு பெரிய உதவியைப் பத்தி அந்தப் பேட்டியில உருகிப் பேசியிருக்காரு.அது குமரி முத்து ஐயாவோட பொண்ணு கல்யாண நேரம். கையில காசு இல்லாம ரொம்ப கஷ்டப்பட்டுட்டு இருந்திருக்காரு.

அந்தச் சமயத்துல சிலோன்ல (இலங்கை) ஒரு கலை நிகழ்ச்சிக்கு அவருக்கு அழைப்பு வந்திருக்கு. அங்க போனா ஒரு 50,000 ரூபாய் கிடைக்கும், அதை வச்சு கல்யாணச் செலவைச் சமாளிக்கலாம்னு நினைச்சு விவேக்கையும் கூட கூப்பிட்டு இருக்காரு. விவேக், “எனக்கு எவ்வளவு கிடைக்கும்?”னு கேட்க, “உனக்கு ஒரு 2 லட்சம் வாங்கித் தர்றேன்”னு குமரி முத்து சொல்லிருக்காரு.நிகழ்ச்சி எல்லாம் முடிஞ்சதுக்கு அப்புறம், சொன்ன மாதிரியே குமரி முத்துவுக்கு 50 ஆயிரமும், விவேக்கிற்கு 2 லட்சமும் கொடுத்திருக்காங்க.

ஆனா, அந்தப் பணத்தை வாங்கின அடுத்த செகண்ட் விவேக் செஞ்ச காரியம் தான் ‘மாஸ்’. தான் வாங்கிய அந்த முழு 2 லட்சத்தையும் அப்படியே குமரி முத்து ஐயா கையில கொடுத்து, “இதை உங்க பொண்ணு கல்யாண செலவுக்கு வச்சுக்கங்க” அப்படின்னு சொல்லிருக்காரு.

இதை எதிர்பார்க்காத குமரி முத்து ஐயா, மேடையிலேயே குழந்தை மாதிரி கதறி அழுதுட்டாரு. “கலைவாணர் என்.எஸ்.கே-வுக்கு அப்புறம் ஒரு சிறந்த மனுஷன்னா அது தம்பி விவேக் தான்”னு அவர் கண்ணீரோட சொல்ற அந்த வீடியோ இப்போ எக்ஸ் (X) தளத்துல பயங்கரமா ஷேர் ஆகிட்டு இருக்கு.
திரையில மத்தவங்களை சிரிக்க வச்ச விவேக், நிஜ வாழ்க்கையில மத்தவங்களோட கண்ணீரைத் துடைச்சிருக்காருங்கிறதுக்கு இந்தச் சம்பவமே ஒரு சாட்சி!

What do you think?

ஒன்றிய அரசை கண்டித்து மானூரில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கண்டன ஆர்ப்பாட்டம்.

நடிகர்களுக்கு செக், வைத்த தயாரிப்பாளர் சங்கம்! ”சினிமாவா? ஓடிடியா?” பரபரக்கும் சினிமா உலகம்!