ராதிகாவோட கெட்டப்பை பார்த்து பாராட்டிய உலகநாயகன்
நம்ம எஸ்கே (Sivakarthikeyan Productions) இதுவரைக்கும் ‘கனா‘ல இருந்து ‘ஹவுஸ் மேட்ஸ்’ வரைக்கும் 8 படம் தயாரிச்சிருக்காங்க.
இப்போ 9-வதா ‘பேஸன் ஸ்டூடியோஸ்’ கூட சேர்ந்து தயாரிச்சிருக்கிற படம்தான் இந்த ‘தாய் கிழவி’.
இந்தப் படத்துல ராதிகா சரத்குமார் ‘பவுனுத்தாயி’ அப்படிங்கிற ஒரு பாட்டி கேரக்டர்ல நடிச்சிருக்காங்க. சும்மா ஏனோ தானோன்னு மேக்கப் போடாம, அதுக்காக ரொம்ப மெனக்கெட்டு இருக்காங்க.
டைரக்டர் சிவகுமார் முருகேசன் என்ன சொல்லிருக்காருன்னா, ராதிகாவோட இந்த கெட்டப்பை உருவாக்குறதுக்கு முன்னாடி உசிலம்பட்டி பக்கம் இருக்குற 100 பாட்டிங்களை நேர்ல பார்த்து அவங்களோட: நெத்தி சுருக்கம், நரை முடி நிறம், முகத்துல இருக்குற மச்சம், தழும்பு பல்லோட நிறம் இது எல்லாத்தையும் போட்டோ எடுத்து, அதையெல்லாம் ஒரு ‘மாடல்’ மாதிரி வைச்சுதான் ராதிகாவுக்கு மேக்கப் போட்டிருக்காங்களாம்.
இந்த மேக்கப் ரொம்ப தத்ரூபமா வரணும்ங்கிறதுக்காக மலையாளத்துல இருந்து வினீஷ் அப்படிங்கிற ஃபேமஸான மேக்கப் மேனை வரவழைச்சிருக்காங்க.
ராதிகாவோட இந்த கெட்டப்பைப் பார்த்துட்டு நம்ம உலகநாயகன் கமல்ஹாசனே “ரொம்ப சூப்பரா பண்ணிருக்கீங்க”ன்னு பாராட்டியிருக்காராம்!

