in

நெல்லை நெல்லையப்பர் திருக்கோவில் தைப்பூச திருவிழா தெப்ப உற்சவம் விமர்சையாக நடைபெற்றது

நெல்லை நெல்லையப்பர் திருக்கோவில் தைப்பூச திருவிழா தெப்ப உற்சவம் விமர்சையாக நடைபெற்றது

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை நெல்லையப்பர் திருக்கோவில் தைப்பூசத் திருவிழா கடந்த 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது 12 நாட்கள் நடைபெறும்.

இந்த திருவிழாவின் சிகரநிகழ்ச்சியான தெப்ப உற்சவம் இன்றைய தினம் கோலாகலமாக நடைபெற்றது இதற்காக சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் விநாயகர் சுப்ரமணியர் சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட சுவாமிகள் சிறப்பாக     அலங்காரம் செய்யப்பட்டு நெல்லையப்பர் கோவிலில் இருந்து தெப்பமண்டபத்திற்கு எழுந்துள்ளனர் தொடர்ந்து.

அங்கு சுவாமி அம்பாள் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு நடைபெற்ற மகா தீபாராதனைக்கு பின் சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் விநாயகர் சுப்ரமணியன் ஆகியோர் பிரம்மாண்ட மின்விளக்கு அலங்காரத்தில் புதிதாக செய்யப்பட்ட தெப்பத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி திருச்சுற்று நடைபெற்றது.

வண்ணமயமான மின்விளக்கு அலங்காரத்தில் மிளிர்ந்த தெப்பக்குளத்தில் சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் எழுந்தருளிய தெப்பத்தில் ஒன்பது முறை நடைபெற்ற திருச்சுற்றை திரளான பக்தர்கள் கண்டு சுவாமி தரிசனம் செய்தனர் தொடர்ந்து வானவேடிக்கைகளும் நடைபெற்றது

What do you think?

திருவேடகம் அருள்மிகு ஏடகநாதர் திருக்கோவிலில் தெப்ப திருவிழா நடைபெற்றது

தூத்துக்குடியில் பேரறிஞர் அண்ணாவின் 57வது நினைவு தினம்