வண்ணம் செய்த பெருமாள் கோயில் கோகுல அஷ்டமி உறியடி வைபவம்
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் பழைய சொரத்தூர் கிராமம் அருள்மிகு ஸ்ரீ சொன்ன வண்ணம் செய்த பெருமாள் கோயில் கோகுல அஷ்டமி முன்னிட்டு உறியடி வைபவம் மற்றும் இரவு வீதி உலா சிறப்பாக நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் பழைய சொரத்தூர் அருள்மிகு ஸ்ரீ சொன்ன வண்ண பெருமாள் கோவிலில் கோகுல அஷ்டமி முன்னிட்டு உற்சவர்கள் வண்ண மலர்கள் கொண்டு ஸ்ரீதேவி பூதேவி சமேத பெருமாளாக அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
தொடர்ந்து பஞ்சமுக திபாரதனை, கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது.
தொடர்ந்து உரியடி வைபவம் மற்றும் இரவு வீதி உலா வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் மாடவீதி வழியாக நடைபெற்றது.

இதில் கிராம பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.


