in

டாட்டா ஏசி மற்றும் லாரி மோதிக்கொண்ட விபத்தில் டாட்டா ஏசி ஓட்டுனர் உடல் நசிங்கி சம்பவ இடத்தில் உயிரிழப்பு.

டாட்டா ஏசி மற்றும் லாரி மோதிக்கொண்ட விபத்தில் டாட்டா ஏசி ஓட்டுனர் உடல் நசிங்கி சம்பவ இடத்தில் உயிரிழப்பு.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த சாலை பகுதியில் லாரி மற்றும் டாட்டா ஏசி மோதிக்கொண்ட விபத்தில் டாடா ஏசி ஓட்டுனர் உடல் நசங்கி சம்பவ இடத்தில் உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வந்தவாசியில் இருந்து போளூர் நோக்கி சென்ற லாரியும், சேத்பட்டிலிருந்து வந்தவாசி நோக்கி வந்த டாட்டா ஏசி வாகனம் ஆவணவாடி கிராமம் கூட்டுச்சாலை அருகே எதிர்பாராத விதமாக ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டு கோர விபத்து ஏற்பட்டதில் டாட்டா ஏசி ஓட்டுநர் அசாருதீன் (25) வாகனத்தின் உள்ளே சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.

மேலும் தகவலறிந்த பொன்னூர் போலீசார் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் வாகனங்களை அப்புறப்படுத்தி சடலத்தை மீட்டு மீட்டு பிரேத பரிசோதனைக்கு வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து பொன்னூர் போலீசார் லாரி ஓட்டுனர் செல்வத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

What do you think?

100 நாள் வேலை திட்டத்தில் பல்வேறு முறைகேடுகளில் திமுக அரசு ஈடுபடுவதை தடுக்கவே தற்போது புதிய முறை கொண்டுவரப்பட்டு உள்ளது.

திருமண வாழ்க்கை பத்தி வந்த விமர்சனங்களுக்கு பிரியங்கா ரொம்ப ஓப்பன் டாக்