பிரம்மாண்ட பலூன் வயல்வெளியில் திடீரென இறங்கியதால் விரைந்து சென்று பார்த்த மதுரை மக்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி
தென் தமிழகத்தில் மிகவும் ஒரு முக்கிய மாவட்டமாக திருவிழா கலாச்சாரம் பண்பாடு இப்படியாக அனைத்தும் நிறைந்த ஒரு மாவட்டமாக மதுரை மாவட்டம் இருந்து வருகிறது .
இந்த நிலையில் மதுரையாடை அழகை ரசிக்க ஒவ்வொரு நாளும் வரக்கூடிய சுற்றுலா பயணிகளுடைய எண்ணிக்கையும் அதிகரித்து வரக்கூடிய நிலையில் வரக்கூடிய சுற்றுலா பயணிகளை கவரும் வண்ணம் சுற்றுலா துறையின் தனியார் நிறுவனங்களும் தனக்கென ஒரு முத்திரையை பதிக்கக்கூடிய வகையில் மதுரையுடைய அழகை அவர்கள் காணும் வண்ணமும் மதுரையுடைய பெருமை கலாச்சாரம் பண்பாடு உள்ளேற்றவைகளை அவர்கள் தெரிந்து கொள்ளும் எண்ணமும் மாவட்ட நிர்வாகம் மட்டுமின்றி தமிழ்நாடு சுற்றுலா துறையோடு சேர்ந்து.
தனியார் நிறுவனங்களும் களத்தில் இறங்கியுள்ள நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னதாக மதுரை விமான நிலையம் அருகே தனியார் ஹெலிகாப்டர் மூலம் மதுரையுடைய அழகை காணும் வண்ணம் ரூபாய் 6000 நிர்ணயம் செய்யப்பட்டு மதுரையுடைய அழகை வானில் இருந்து மதுரை மக்களுக்கு காணும் வகையில் தனியார் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது.
தற்போது அதேபோன்று தனியார் நிறுவனம் ஒன்று மதுரையில் முதல் முறையாக ஹாட் இயர் பலூன் சபாரி என்னும் நிகழ்வை ஏற்பாடு செய்திருக்கிறார்கள் குறிப்பாக கடந்த ஜனவரி 30 முதல் பிப்ரவரி 22ஆம் தேதி வரை நிர்ணயம் செய்த அந்த குழுவினர் மதுரை ஆதனூர் பகுதியில் இருக்கக்கூடிய விஷால் ஸ்வர்ணபூமி பகுதியில் இருந்து காலை வேளையில் சூரிய உதயத்திற்கு முன்னரே புறப்பட்டு சுமார் 25 முதல் 45 நிமிடங்கள் வானில் பறக்கக்கூடிய வகையில் ஏழு நபர்களைக் கொண்ட நாள் ஒன்றுக்கு ஒரு பயணம் என நிர்ணயம் செய்திருக்கிறது.
இந்த பயணத்தில் சுமார் நான் ஊரிலிருந்து 500 கிலோ எடையுள்ள மொத்தம் ஏழு நபர்கள் மட்டுமே பயணம் செய்ய முடியும் என அவர்கள் விளம்பரம் செய்திருக்கக் கூடிய நிலையில் கட்டணமாக நபர் ஒன்றுக்கு 15,000 மற்றும் வரி என நிர்ணயம் செய்து விளம்பரம் செய்திருக்கிறார்கள்.
இந்த நிலையில் இன்று காலை புறப்பட்ட இந்த பலூன் சபாரி சோதனை முறையில் அங்கிருந்து புறப்பட்டது. வானில் வட்டமடித்து வந்த நிலையில் மதுரை வடபழஞ்சி பகுதியை சேர்ந்த மக்கள் வானில் பிரம்மாண்ட பலூன் வருவதை பார்த்து தங்களது கைபேசிகளில் புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்க கூடிய வேலையில் வடபழஞ்சி பகுதியில் இருக்கக்கூடிய வயல்வெளியில் திடீரென இறங்கியதும் .
ஏதோ விபத்து நேர்ந்து விட்டது என்று அப்பகுதி மக்கள் உடனடியாக அங்கு சென்று பார்த்தல்.
மதுரையைச் சேர்ந்த தனியார் நிறுவன மேலாளர்கள் மற்றும் அந்த ஹாட் ஏர் பலூன் இயக்கக்கூடிய ஊழியர்களுக்கு குழு அங்கே பத்திரமாக தங்களுடைய பலூனை தர இயக்கியது .
அதனை தொடர்ந்து ஏற்கனவே தயார் நிலையில் அவர்களை அங்கிருந்து புறப்பட்ட இடத்திற்கு அழைத்து செல்வதற்காக வாகனம் வந்த நிலையில் சோதனை முயற்சிக்காக பலூனில் பிறந்த அனைவரும் பத்திரமாக தங்களது இருப்பிடம் நோக்கிச் சென்றனர்.
தாங்கள் குடியிருக்க கூடிய பகுதியில் திடீரென ஒரு பிரம்மாண்ட பலூன் பறந்து தரையிறங்கிய நிலையில் விபத்து என்று அச்சத்தில் சென்ற மக்களுக்கு இது பொழுதுபோக்கிற்கான குறிப்பாக மதுரையை வானில் இருந்து பறக்க தனியார் நிறுவனம் ஏற்பாடு செய்த பிரம்மாண்ட பலூன் என தெரிய வந்தது.

