காவல்துறை சார்பில் சமத்துவ பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது
கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுக்காவில் மகளிர் காவல் நிலையம் உட்பட 7 காவல் நிலையம் உள்ளது. இந்த 7 காவல் நிலையத்தில் பணிபுரியும் 100 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் திருவிடைமருதூர் காவலர்கள் குடியிருப்பு நிலையத்தில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் உலகம் தழுவிய அளவில் ஒட்டு மொத்த தமிழர்களின் பாரம்பரிய விழாவாக, வேளாண்மையை போற்றும் வகையிலும், வேளாண்மைக்கு உதவும் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், சூரியனை வணங்கும் நிகழ்வாகவும், ஆண்டு தோறும், தை முதல் நாள் பொங்கல் பண்டிகை

கொண்டாடப்படுகிறது, சாதி மதங்களை கடந்து, தமிழன் என்ற உணர்வோடு கொண்டாடப்படும் இவ்விழாவினை போற்றும் வகையில், சமத்துவ பொங்கல் விழா காவல்துறை துணை கண்காணிப்பாளர் ராஜு, தலைமையில் நடைபெற்றது.
இதில் காவல்துறை ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், தலைமை காவலர்கள் பாரம்பரிய உடையணிந்து புத்தம் புது பானைகளில் பச்சரிசி இட்டு, பொங்கல் வைத்து, பொங்கி வரும் போது, பொங்கலோ பொங்கல் என உற்சாக முழக்கமிட்டு, பொங்கல் விழா, உற்சாகமாக கொண்டாடினார்கள்.,
தொடர்ந்து கோலப்போட்டி, மியூசிக்கல் சேர், வழுக்கு மரம் ஏறுதல், ஆண் காவலர்கள், பெண் காவலர்கள், மற்றும் தனித்தனி காவல் நிலையத்தில் பணிபுரியும் தனித்தனியே காவல்துறை ஆய்வாளர்கள் தலைமையிலும் கயிறு இழுத்தல் போட்டியும் நடைபெற்றது. மற்றும் வெற்றி பெற்ற காவலர்களுக்கு பரிசும் ஊக்க தொகையும் வழங்கப்பட்டன.


