in

கும்பகோணத்தில் தமிழ் வெற்றி கழகம் சார்பில் கொட்டும் மழையில் சமத்துவ பொங்கல் விழா மற்றும் விளையாட்டு விழா

கும்பகோணத்தில் தமிழ்ல வெற்றி கழகம் சார்பில் கொட்டும் மழையில் சமத்துவ பொங்கல் விழா மற்றும் விளையாட்டு விழா சிறப்பாக நடைபெற்றது 

கும்பகோணத்தில் உலகம் தழுவிய அளவில் ஒட்டு மொத்த தமிழர்களின் பாரம்பரிய விழாவாக, வேளாண்மையை போற்றும் வகையிலும், வேளாண்மைக்கு உதவும் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், சூரியனை வணங்கும் நிகழ்வாகவும், ஆண்டு தோறும், தை முதல் நாள் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது,

சாதி மதங்களை கடந்து, தமிழன் என்ற உணர்வோடு கொண்டாடப்படும் இவ்விழாவினை போற்றும் வகையில், தமிழக வெற்றி கழகம் மத்திய ஒன்றியம் சார்பில் கொரநாட்டு கருப்பூரில் சமத்துவ பொங்கல் விழா மாவட்ட செயலாளர் வினோத் ரவி, தலைமையில் நடைபெற்றது.

இதில் கொரநாட்டு கருப்பூர் சேர்ந்த 250 நபர்களுக்கு பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, நெய், கரும்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து கொட்டும் மழையில் புது பானைகளில் பச்சரிசி இட்டு, பொங்கல் வைத்து, பொங்கி வரும் போது, பொங்கலோ பொங்கல் என உற்சாக முழக்கமிட்டு, பொங்கல் விழாவை, உற்சாகமாக கொண்டாடினர்கள்.

தொடர்ந்து பெண்களுக்கான பானை உடைத்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளும் நடைபெற்றன. வெற்றி பெற்றவருக்கு ரொக்க தொகை வழங்கப்பட்டன.

What do you think?

வடலூரில் ரூபாய் 7.53 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையத்தினை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்த அமைச்சர்கள்

எல்லா தடைகளும் நீங்கிடுச்சு.. ஜனவரி 14-ஆம் தேதி படம் ரிலீஸ்