‘ஜனநாயகன்’ படம் ரிலீஸ் ஆகுறது சாத்தியமே இல்லை
நாளைக்கு (ஜனவரி 9) தியேட்டரே திருவிழாவா மாறும்னு நினைச்சப்போ, இப்போ அந்தத் தேதியில படம் ரிலீஸ் ஆகுறது *”சாத்தியமே இல்லை”*ங்கிற நிலைமை உருவாகிடுச்சு.
சென்சார் போர்டு சர்டிபிகேட் தராததுக்கு பின்னாடி ஒரு சீரியஸான காரணத்தை அரசாங்கம் கோர்ட்ல சொல்லியிருக்காங்க. மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் கோர்ட்ல சொன்னது என்னன்னா: படத்துல இந்தியப் பாதுகாப்புப் படைகளோட (Defense Forces) சின்னங்கள், அடையாளங்கள் மற்றும் யூனிஃபார்ம்களைப் பயன்படுத்தியிருக்காங்க.
இதைப் பயன்படுத்துறதுக்கு முன்னாடி சம்பந்தப்பட்ட துறைகிட்ட முறையான அனுமதி (NOC) வாங்கணுமாம். ஆனா படக்குழு அந்த அனுமதியை வாங்காமலேயே ஷூட்டிங் நடத்திட்டாங்கன்னு சொல்லப்படுது.
இதுதான் இப்போ சென்சார் தராமல் இழுத்தடிக்கக் காரணமாம். தயாரிப்பு நிறுவனம் “நாளைக்கு ரிலீஸ் பண்ணனும், உடனே ஆர்டர் போடுங்க”னு கேட்டாங்க. ஆனா நீதிபதி, “ஒரு குறிப்பிட்ட தேதிக்குள்ள தான் சர்டிபிகேட் தரணும்னு நாங்க உத்தரவிட முடியாது.
இதோட இறுதித் தீர்ப்பை நாளைக்கு (ஜனவரி 9) மதியம் சொல்றோம்”னு சொல்லிட்டாங்க. இதனால நாளைக்கு படம் வராதுங்கிறது கன்பார்ம் ஆகிடுச்சு.
விஜய் சார் இதைப் பத்தி ‘ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழாவிலேயே ஒரு மேட்டரை உடைச்சாரு.
இப்போ அது பயங்கர வைரல்: “சும்மாவே என் படங்களுக்குப் பிரச்சனை வரும். இப்போ நான் வேற ட்ராக்குல (அரசியல்), வேற திசையில போறேன்.. சொல்லவா வேணும்? அதனால தான் படம் தயாரிக்கச் சம்மதமானு தயாரிப்பாளர் KVN கிட்டயே முன்னாடியே கேட்டேன்!” அவர் அன்னைக்குச் சொன்ன மாதிரியே இன்னைக்குப் பெரிய அரசியல் மற்றும் சட்டச் சிக்கல்ல படம் மாட்டிட்டு இருக்கு.
முதல் நாள் முதல் காட்சி (FDFS) பாக்க காத்துட்டு இருந்த லட்சக்கணக்கான ரசிகர்கள் இப்போ அப்செட்ல இருக்காங்க. “வேணும்னே விஜய்யைத் தடுக்குறாங்க”னு ஒரு தரப்பும், “அனுமதி வாங்காதது தயாரிப்பாளர் தப்பு”னு ஒரு தரப்பும் பேசிட்டு இருக்காங்க.
இனி நாளைக்கு மதியம் கோர்ட் என்ன சொல்லப்போகுது? படம் பொங்கலுக்காவது வருமா? இல்ல ரிலீஸ் தள்ளிப்போகுமா? வெயிட் பண்ணித் தான் பாக்கணும்.


