போராட்டத்தில் ஈடுபட்ட வருவாய் துறையினரால் பொதுமக்கள் அவதி.
சீர்காழியில் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தற்செயல் விடுப்பு எடுத்து
வருவாய் துறையினர் போராட்டம். சான்றிதழ் பெறுவதற்காக வந்த பொதுமக்கள் அவதி.
வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு போராட்டம் மற்றும் தர்ணா போராட்டம் மயிலாடுதுறையில் நடைபெற்றது.
இதில் பங்கேற்பதற்காக சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் துணை வட்டாட்சியர்கள், மண்டல துணை வட்டாட்சியர் உள்ளிட்ட அனைத்து நிலை அலுவலர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரும் தற்செயல் விடுப்பு எடுத்து சென்றனர்.

இதனால் சீர்காழி வட்டாட்சியர் அலுவலகம் அலுவலர்கள், மற்றும் கடைநிலை ஊழியர்கள் என யாரும் இல்லாமல் பிரதான கதவு மூடப்பட்டிருந்தது. அலுவலர்களின் போராட்டம் குறித்து அறியாத பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மகளிர் உரிமைப் பகுதி தொடர்பான கோரிக்கைகள், வருமானச் சான்று, இருப்பிட சான்று, சாதி சான்றிதழ் பட்டா மாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்காக வட்டாட்சியர் அலுவலகம் வருகை புரிந்தனர்.
வட்டாட்சியர் அலுவலகத்தில் யாரும் இல்லாததால் பொதுமக்கள் பல மணி நேரம் காத்திருந்தனர். வருவாய்த் துறையினர் போராட்டம் குறித்து நீண்ட நேரத்திற்கு பிறகு தெரிய வந்ததால் அது குறித்து எந்த அறிவிப்பும் இல்லை என வருத்தத்துடன் புலம்பி சென்றனர்.


