தாய்மாமன் சீர் குதிரை வண்டி மற்றும் மாட்டு வண்டியில் ஊர்வலமாக வந்து அசத்தல்
தாய்மாமன் சீர் மேளதாளங்கள் முழங்க சண்ட மேலங்களுடன் குதிரை வண்டி மற்றும் மாட்டு வண்டியில் ஊர்வலமாக வந்து அசத்தல்…
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பேரூராட்சிக்குட்பட்ட சக்கராபுரம் பகுதியைச் சேர்ந்த தனியார் ஆம்புலன்ஸ் உரிமையாளரும் சமூக சேவகர் சிவராஜ் – சரளா தம்பதியரின் குழந்தைகளான தீப ஜனனி, பவதாரணி, இவர்களுக்கு செஞ்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் காதணி விழா நடைபெற்றது.
காதணி விழா குழந்தைகளின் தாய்மாமன் சரவணன் இறந்துவிட தாய்மாமன் இருந்தால் சீர் வரிசை கிடைத்து இருக்குமே என்ற ஏக்கத்தை போக்க குழந்தைகளின் பாட்டி சரளா காதணி விழாவிற்கு காதணி விழா மாணவிகளை குதிரை வண்டியிலும், தாய்மாமன் சீர்களான 108 தட்டுகளில் மா,பலா, வாழை உள்ளிட்ட பல்வேறு சீர்வரிசைகளை நான்கு சக்கர மாட்டு வண்டியில் மேளதாளங்கள், சண்ட மேளங்கள் முழங்க திண்டிவனம் சாலை, செஞ்சி நான்கு முனை கூட்ரோடு வழியாக, திருவண்ணாமலை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்திற்கு உறவினர்களுடன் கொண்டு சென்றார்.

தாய்மாமன் சீர் குதிரை வண்டியிலும், மாட்டு வண்டியிலும் எடுத்துச் சென்ற நிகழ்வு அப்பகுதி பொதுமக்களுக்கு நெகிழ்ச்சி ஏற்படுத்தியது …


