சிதம்பரம் தில்லை அம்மன் கோயிலில் ரூ 2.75 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட குளம்.
இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அருள்மிகு தில்லை அம்மன் திருக்கோயிலில் ரூ. 2.75 கோடி மதிப்பீட்டில் கோயிலின் திருக்குளம் பழுது பார்த்து புதுப்பிக்கப்பட்டது. பழுதடைந்த படிக்கட்டுகள் கட்டப்பட்டு சுற்றுச்சுவர் உள்ளிட்டவை செய்து முடிக்கப்பட்டது.

இதையடுத்து இந்த குளம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளிக் காட்சி மூலம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குளத்தை திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து குளத்தின் அருகே குத்துவிளக்கேற்றி தீபாராதனை காண்பிக்கப்பட்டு அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
பின்னர் கோயிலின் குளத்திற்கு சென்று அங்கு தீபாராதனை காண்பித்து குளத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கோயில் செயல் அலுவலர் நரசிங்கபெருமாள், அறநிலையத்துறை ஆய்வாளர் சீனிவாசன், கவுன்சிலர்கள் ஜெயசித்ரா பாலசுப்பிரமணியன், மணிகண்டன், ஒப்பந்ததாரர் சண்முகசுந்தரம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

