சிதம்பரம் நடராஜர் கோவில் பஞ்ச மூர்த்தி சுவாமிகள் நான்கு ரத வீதிகளில் வீதி உலா.
சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சன விழாவையொட்டி ஐந்தாம் நாள் தெருவடச்சான் விழா கோலாகலம், பஞ்ச மூர்த்தி சுவாமிகள் நான்கு ரத வீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பு, ஆயிரக்கணக்கான பொதுமக்கள், பக்தர்கள் பங்கேற்பு.
உலகப் பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனித் திருமஞ்சன தரிசன விழா கடந்த 23-ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் பஞ்சமூர்த்தி சுவாமிகள் வீதி உலா வந்த நிலையில், ஐந்தாம் நாளான நேற்று தெருவடசான் விழா கோலாகலமாக நடைபெற்றது.

இதில் பஞ்சமூர்த்தி சுவாமிகள் நான்கு ரத வீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து சென்றனர்.


