in

 ‘பராசக்தி’ ஓப்பனிங் எஸ்கே-வோட இன்ட்ரோ சீன் செம மாஸ்

 ‘பராசக்தி’ ஓப்பனிங் எஸ்கே-வோட இன்ட்ரோ சீன் செம மாஸ்

 

சிவகார்த்திகேயன் – சுதா கொங்கரா கூட்டணியில் உருவான ‘பராசக்தி’ படம் ஒருவழியாக இன்னைக்கு தியேட்டருக்கு வந்துடுச்சு.

மார்னிங் ஷோ பார்த்த ரசிகர்கள் என்ன சொல்றாங்க? விஜய் சாரோட ‘ஜனநாயகன்’ தள்ளிப்போனதுனால, இப்போ சிவகார்த்திகேயனுக்கு செம லக்!

உலகம் முழுக்க சோலோ ரிலீஸா ‘பராசக்தி’ இறங்கியிருக்கு. சென்சார் சிக்கல் எல்லாம் தாண்டி வந்த இந்தப் படம் எப்படி இருக்கு?

எஸ்கே + ரவி மோகன் + அதர்வா: மூணு பேரும் ஒண்ணா ஸ்கிரீன்ல வரும்போது தியேட்டர் அதிருது. மூணு பேருக்கும் ஈக்குவல் ஸ்கோப் கொடுத்து சுதா கொங்கரா செதுக்கியிருக்காங்களாம்.

இந்தப் படம் மூலமா ஸ்ரீலீலா தமிழுக்கு வந்திருக்காங்க. கூடவே பேசில் ஜோசப், ராணாவோட கேமியோவும் படத்துக்குப் பெரிய பலம்.

ஓப்பனிங் மாஸ்: எஸ்கே-வோட இன்ட்ரோ சீன் செம மாஸா இருக்காம். படம் ஆரம்பிச்ச உடனே டைம் வேஸ்ட் பண்ணாம மெயின் கதைக்குள்ள போயிட்டாங்கன்னு ரசிகர்கள் பாராட்டுறாங்க.

பிரபல தயாரிப்பாளர் தனஞ்சயன் படத்தை பார்த்துட்டு, “இது கண்டிப்பா பிளாக்பஸ்டர் தான்!”னு மனதார பாராட்டியிருக்காரு.

இசை, கதை, இயக்கம்னு எல்லா டிபார்ட்மென்ட்லயும் படம் டாப்ல இருக்குறதா பேச்சு கிளம்பிருக்கு. படம் நல்லா இருக்குன்னு ஒரு பக்கம் பாசிட்டிவ் கமெண்ட்ஸ் வந்தாலும், இன்னொரு பக்கம் சில நெகட்டிவ் ட்வீட்களும் வருது.

ஆனா, இது வேணும்னே படத்தைக் கெடுக்க சிலர் பண்ற ‘நெகட்டிவ் பி.ஆர்’ வேலைன்னு எஸ்கே ரசிகர்கள் சோஷியல் மீடியாவுல சண்டை போட்டுட்டு இருக்காங்க.

உண்மையிலேயே படம் பார்த்தவங்க யாருமே குறை சொல்லலையாம்!

விஜய் படம் வராததுனால, எஸ்கே-வோட கரியர்லயே இதுதான் மிகப்பெரிய ஓப்பனிங் வாங்கும்னு எதிர்பார்க்கப்படுது. வர்ற பொங்கல் விடுமுறையில ‘பராசக்தி’ வசூல்ல புது ரெக்கார்டு படைக்கும்னு விநியோகஸ்தர்கள் செம குஷியில இருக்காங்க.

What do you think?

‘ஜனநாயகன்’ படத்தை மட்டும் வேணும்னே நிறுத்தல – நடிகர் சரத்குமார்

பிரபாஸ் நடிப்புல மாஸ் ஆக்ஷன் த்ரில்லரா உருவாயிருக்கு ‘தி ராஜா சாப்’