புதியதாக கட்டப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடத் திணை தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்….
திருவண்ணாமலை மாவட்டத்தில் புதுப்பாளையத்தில் புதியதாக கட்டப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடத் திணை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளிக்காட்சி வாயிலாக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பாக புதியதாக கட்டப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடத்தினை திறந்து வைத்தார்.
அதனை தொடர்ந்து தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குத்துவிளக்கேற்றி பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.

இந்நிகழ்ச்சியில் கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெ.சு.தி.சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.இராம்பிரதீபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத்தலைவர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு எண்ணற்ற திட்டங்களையும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை செயல்படுத்தி வருகிறது.
அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பாக புதுப்பாளையத்தில் ரூ.5 கோடியே 90 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
வளர்ச்சி திட்டப்பணிகளை தொடர்ந்து செயலாறிட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு ஆதரவு அளிக்கவேண்டும் என்று மாண்புமிகு தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.


