முருக பக்தர்கள் மாநாடு பாஜகவிற்கு சூரசம்காரம் செய்யும் மாநாடாக அமையும்.
தமிழ்நாட்டு மக்களை வஞ்சித்து துரோகம் செய்யும் பாஜகவிற்கு மதுரையில் நடைபெற உள்ள முருக பக்தர்கள் மாநாடு சூரசம்காரம் செய்யும் மாநாடாக அமையும் என பாபநாசத்தில் மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.சுதா பேட்டி.
தமிழகம் முழுவதும் தேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பிறந்தநாள் விழா விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் ராகுல் காந்தியின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பாபநாசம் நகரத் தலைவர் பாலாஜி தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.சுதா, காங்கிரஸ் கட்சியின் தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் டி.ஆர். லோகநாதன் ஆகியோர் கலந்து கொண்டு காங்கிரஸ் கட்சி கொடியினை ஏற்றி வைத்து ஏழை எளியவர்களுக்கு அறுசுவை உணவு, மரக்கன்றுகள் வழங்கி பாபநாசம் வட்டார நகர காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை திறந்து வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.சுதா செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில், தமிழகத்தில் கல்வி மற்றும் எந்த அடிப்படை தேவைகளுக்கும் நிதி உதவிகள் வழங்காமல் மத்திய மோடி அரசு தர மறுத்து வருகின்றது என்றும், மேலும் விவசாயிகளுக்கு தேவையான உதவிகள் செய்யாததால் பல்வேறு கட்ட போராட்டங்களை விவசாயிகள் நடத்தி வருகிறார்கள்.
மேலும் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை மத்திய அரசு இதுநாள் வரை வழங்க வில்லை எனவும், தமிழகத்திற்கு துரோகம் செய்யும் பாஜகவிற்கு மதுரையில் நடைபெற உள்ள முருக பக்தர்கள் மாநாடு சூரசம்காரம் மாநாடாக அமையும் என அவர் பேசினார்.