in

மாடக்குளம் பகுதியில் குடை எடுப்பு திருவிழாவோடு கோலாகலமாக தொடங்கிய மாசிக்காரி திருவிழா

மாடக்குளம் பகுதியில் குடை எடுப்பு திருவிழாவோடு கோலாகலமாக தொடங்கிய மாசிக்காரி திருவிழா

மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மாடக்குளம் … மாடக்குளம் என்றாலே அனைவருடைய நினைவுக்கும் வருவது மதுரைக்கே குடிநீர் ஆதாரமாக விளங்கக்கூடிய கண்மாயும் கரைமேல் வீற்றிருந்து அருள்பாளிக்க கூடிய அருள்மிகு ஈடாடி அய்யனாரும் தான்

மாசிக் களரி திருவிழா இன்று தொடங்கி வரும் 22ஆம் தேதி வரை   நடைபெறக்கூடிய நிலையில் ஊர் குடும்பன் வீட்டிலிருந்து புறப்பட்ட குடை கண்மாய் கரையில் இருக்கக்கூடிய அய்யனார் கோவில் சென்று, அங்கு ஸ்ரீ ஈடாடி அய்யனார் மற்றும் சின்ன கருப்பண சுவாமி பெரிய கருப்பண சுவாமி பேச்சியம்மன், சோனை சுவாமி ஆகிய சுவாமிகளுக்கு நடைபெற்ற சிறப்பு பூஜைகளுக்குப் பிறகு சுவாமி அடிகள் அங்கிருந்து சுவாமி ஆடிய படி பொதுமக்கள் மற்றும் பக்தர்களோடு ஊர்வலமாக வந்தனர்.

மாடக்குளம் கிராமத்தில் இருக்கக்கூடிய நவராத்திரி கொலு மண்டபம், மந்தை திடல் இப்படியாக இப்படியாக மாடக்குளம் முழுவதும் ஊர்வலமாக வருகை தந்து சுவாமியாடிகள் அனைவரும் சோனை கோவில் வந்தடைந்தனர்

தொடர்ந்து சுவாமி ஆடிகள் சுவாமி ஆடி பக்தர்களுக்கும் பொது மக்களுக்கும் அருளாசி வழங்கினர்

இன்று தொடங்கி 5 நாட்கள் நடைபெறக்கூடிய இந்த மாசி களரி திருவிழாவில் சுவாமி ஆடிகளுடைய உறவினர்கள் மற்றும் பக்தர்கள் ஊர் பொதுமக்கள் என ஏராளமான ஒரு பங்கு பெற்று அருளாடிகளிடம் ஆசி பெற்று வருகின்றனர்

ஒவ்வொரு நாளும் சுவாமி புறப்பாடு சுவாமி ஆடுதல் பக்தர்களுக்கு ஆசி வழங்குதல் உள்ளிட்டவைகள் நடைபெற உள்ள நிலையில் இந்த மாசி கழகத் திருவிழாவை முன்னிட்டு கண்மாய் கரையில் இருக்கக்கூடிய ஐயனார் கோவில் முதல் திருவிழா நடைபெறும்.

மாடக்குளம் பகுதி முழுவதுமாக வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஒட்டுமொத்த கிராமமே திருவிழா கோலம் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது

What do you think?

சிறப்பு வரன்முறை திட்டத்தின் கீழ் ஆறு இடங்களில் உள்ள சுமார் 500 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி

உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் சாம்பல் புதன் துவங்கியது