இரட்டணை ஸ்ரீ வெண்ணியம்மன் ஆலய மார்கழி மாத பௌர்ணமி ஊஞ்சல் உற்சவம்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டம் இரட்டணை கிராமம் அருள்மிகு ஸ்ரீ வெண்ணியம்மன் ஆலய மார்கழி மாத பௌர்ணமி முன்னிட்டு .
அலங்கரிக்கப்பட்ட உற்சவர் வெண்ணியம்மனுக்கு கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டு சிறிய தேரில் கோயில் உட்பிரகாரம் வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.


தொடர்ந்து ஊஞ்சலில் காட்சியளித்த வெண்ணியம்மனுக்கு கும்ப தீபம், அடுக்கு தீபம்,பஞ்சமுக தீபாதாரணை, சத்திரங்கள் கொண்டு சோடச உபச்சாரம் ஆகியவை காண்பிக்கப்பட்டது, இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திண்டிவனம் கிடங்கல் ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி உடனுறை அன் பநாயகஈஸ்வரர் திருக்கோயிலில் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசன சிறப்பு அபிஷேகம். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் கிடங்கல் கோட்டை ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி உடனுறை அன் பநாயகஈஸ்வரர் திருக்கோயிலில் மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் வருடம் தோறும் ஆருத்ரா தரிசனம் நடைபெறுவது வழக்கம். சிவபெருமானின் வடிவங்களில் ஒன்றான நடராஜ மூர்த்திக்கு வருடத்தில் ஆறு முறை மட்டுமே அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.
இவற்றில் மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரம் அன்று நடைபெறும் அபிஷேகத்திற்கு ஆருத்ரா தரிசனம் என்று பெயர்.

இந்த தரிசனம் உருவாவத்தற்கு புராணங்களில் கதை ஒன்று சொல்லப்படுகிறது. மேலும் ஆருத்ரா சிவபெருமானின் வடிவங்களில் ஒன்றான நடராஜ மூர்த்திக்கு வருடத்தில் ஆறு முறை மட்டுமே அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.
இவற்றில் மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரம் அன்று நடைபெறும் அபிஷேகத்திற்கு ஆருத்ரா தரிசனம் என்று பெயர்.
இந்த தரிசனம் உருவாவத்தற்கு புராணங்களில் கதை ஒன்று சொல்லப்படுகிறது. மேலும் உற்சவ தெய்வங்களுக்கு பால் தயிர் சந்தனம் பஞ்சாமிர்தம் இளநீர் தேன் உள்ளிட்ட 51 வகையான பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


