in

சுவாமிகள் 179 வது ஆராதனை விழாவின் முக்கிய நிகழ்வான பஞ்சரத்னை கீர்த்தனை துவங்கியது

சுவாமிகள் 179 வது ஆராதனை விழாவின் முக்கிய நிகழ்வான பஞ்சரத்னை கீர்த்தனை துவங்கியது

சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவராக போற்றப்படும் சத்குரு. ஸ்ரீதியாகராஜர் சுவாமிகள் 179 வது ஆராதனை விழாவின் முக்கிய நிகழ்வான பஞ்சரத்னை கீர்த்தனை துவங்கியது பிரபல கர்நாடக இசை கலைஞர்களான
சுதாரகுநாதன் நித்யஸ்ரீ மகாதேவன், மஹதி உள்ளிட்ட ஆயிரக்கணக்கான கர்நாடக இசை கலைஞர்கள் ஒரு சேர பாடி தியாகராஜருக்கு இசை அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவராக போற்றப்படும் சத்குரு ஸ்ரீதியாகராஜர் சுவாமிகள் தஞ்சை மாவட்டம் திருவையாறு திருமஞ்சன வீதியில் தங்கி
தனது வாழ்நாள் முழுவதும் ராமபிரானை போற்றி யாசகம் பெற்று வாழ்ந்து வந்தார். காவிரி கரையில் பகுல பஞ்சமி திதி அன்று முக்தி அடைந்தார்.

தியாக பிரம்ம சபா சார்பில் தியாகராஜர் முக்தி அடைந்த தினத்தை ஆராதனை விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி 179 வது ஆராதனை விழா 3ம் தேதி திருவையாறில் துவங்கியது.

விழாவின் முக்கிய நிகழ்வான பஞ்சரத்னை கீர்த்தனையில் பிரபல கர்நாடக இசை கலைஞர்களான சுதா ரகுநாதன், நித்யஸ்ரீ மகாதேவன், மெஹதி உள்பட ஏராளமான கர்நாடக இசை கலைஞர்கள் ஒரு சேர தியாகராஜருக்கு மிகவும் பிடித்த ராகங்களான நாட்டை, கெளனை, ஆரபி, வராளி, ஸ்ரீராகம் ஆகிய ஐந்து ராகங்களில் அமைந்த கீர்த்தனைகளை பாடி தியாகராஜருக்கு இசை அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

What do you think?

புதுவை மாநிலம் ரெட்டியார்பாளையம் பிரசிடென்சி மேல்நிலைப்பள்ளி கலை விழா

நாமக்கல் ராசிபுரம் ஸ்ரீ இரட்டை விநாயகருக்கு மார்கழி மாத சங்கடஹர சதுர்த்தி