அம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது
நெல்லை தச்சநல்லூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சந்தி மறித்த அம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது. குடமுழுக்கு விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்
நெல்லை மாவட்டத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சக்தி திருத்தலங்களில் ஒன்றாக விளங்குவது நெல்லை தச்சநல்லூர் பகுதியில் அமைந்துள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த சந்தி மறித்த அம்மன் திருக்கோவிலாகும். கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 23ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது தொடர்ந்து பல்வேறு சிறப்பு பூஜைகளுடன் யாகசாலை பூஜைகளும் நடைபெற்று வந்தது

இன்று அதிகாலை நான்காம் காலை யாகசாலை பூஜைகள் நடைபெற்றது தொடர்ந்து நான்கு கால யாக வேள்விகளில் பூஜை செய்யப்பட்ட மகா கலசத்திற்கு மகாதீபாரதனை செய்யப்பட்டு மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.
தொடர்ந்து விமானத்திற்கும் ராஜகோபுரத்திற்கும் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது பின்னர் விமான கலசங்களுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீப ஆராதனை நடைபெற்றது.
தொடர்ந்து மூலவர் சந்தி மறித்த அம்மனுக்கும் உற்சவருக்கும் மகா கும்பாபிஷேகம் நடைபெற்ற மகா தீபாராதனை நடைபெற்றது இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்


