ஹாரிஸ் ரசிகர்கள் ரொம்ப நாளா எதிர்பார்த்துட்டு இருந்த ‘மேஜிக்’ இப்போ நடந்துடுச்சு
நம்ம ஊரு ‘மெலடி கிங்’ ஹாரிஸ் ஜெயராஜ் பத்தி சொல்லவே வேணாம்.
‘மின்னலே’ படத்துல ஆரம்பிச்சு, இப்போ வரைக்கும் அவரோட மியூசிக்ல வர்ற ஒவ்வொரு பாட்டும் ஒரு தனி ரகம். இப்போ அவர் ‘காதல் ரீசெட் ரிப்பீட்’ (Kaadhal Reset Repeat) அப்படிங்குற படத்துக்கு மியூசிக் பண்ணிட்டு இருக்காரு.
இயக்குநர் விஜய் இயக்கத்துல வர்ற இந்தப் படத்துல மதுமகேஷ், ஜியா சங்கர், எம்.எஸ். பாஸ்கர்னு ஒரு பெரிய பட்டாளமே நடிச்சிருக்காங்க.
ஏ.எல். விஜய் படம்னாலே ஒரு மென்மையான காதல் இருக்கும், அதுக்கு ஹாரிஸ் மியூசிக்னா கேக்கவா வேணும்! இதுதான் பாஸ் ஹைலைட்!
ஹாரிஸ் ஜெயராஜ் மியூசிக்ல இதுவரைக்கும் சித் ஸ்ரீராம் ஒரு பாட்டு கூட பாடுனது இல்ல. இப்போ முதல் முறையா இவங்க ரெண்டு பேரும் கூட்டணி அமைச்சிருக்காங்க.
இந்தக் கூட்டணியில உருவான “உன்னை நினைத்து” அப்படிங்குற முதல் சிங்கிள் பாடல் இப்போ வெளியாகி இருக்கு.
சித் ஸ்ரீராமோட அந்தத் தனித்துவமான குரலும், ஹாரிஸோட அந்த க்ளாசிக் மெலடியும் சேர்ந்து காதுகளுக்குப் பெரிய விருந்தாவே இருக்கு!
ஹாரிஸ் ரசிகர்கள் ரொம்ப நாளா எதிர்பார்த்துட்டு இருந்த அந்த ‘மேஜிக்’ இப்போ நடந்துடுச்சு. ஹெட்போன் போட்டுட்டு லூப்ல கேக்க ரெடி ஆயிக்கோங்க!


