பரிமள ரங்கநாதர் ஆலயத்தில் சொக்கப்பானை ஏற்றும் வைபவம்
மயிலாடுதுறை திருஇந்தளூர் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்ததும் பஞ்ச அரங்கச் சேத்திரங்களில் ஐந்தாவதுமான பரிமள ரங்கநாதர் ஆலயத்தில் சொக்கப்பானை ஏற்றும் வைபவம் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை திருந்தளூரில் 108 வைணவ திவ்ய தேசங்களில் 22 ஆவது ஆலயமான பரிமள ரங்கநாதர் ஆலயம் அமைந்துள்ளது.
காவிரி கரையில் பெருமாள் பள்ளிகொண்ட நிலையில் அமைந்துள்ள ஸ்ரீரங்கம் சாரங்கம் உள்ளிட்ட ஐந்து அரங்கங்களில், ஐந்தாவது ஆலயமாக இது போற்றப்படுகிறது.
இந்த ஆலயத்தில் இன்று திருக்கார்த்திகை சிறப்பு பூஜை நடத்தப்பட்டது .இதையொட்டி கோவில் முன்பு சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து கோவில் முன்பு எழுந்தருளி சொக்கபனை ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது..

இதில் அந்தந்த பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டு தங்களது செல்போன் மூலம் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து சொக்கபானை ஏற்றும் வைபவத்தை கண்டு மகிழ்ந்தனர்.


