மயிலாடுதுறை அருகே மூன்று தலைமுறைக்கு மேலாக மாட்டுப் பொங்கலுக்காக செய்யப்படும் பாரம்பரிய நெட்டி மாலையை தயாரிப்பு
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த மன்னம்பந்தல் கிராமத்தில் மாட்டுப் பொங்கல் அன்று கால்நடைகளுக்கு அணிவிக்கப்படும் இயற்கையான நெட்டி மாலை செய்து விற்பனை செய்து அதிலிருந்து கிடைக்கும் சொற்ப வருவாயை கொண்டு மூன்றாவது தலைமுறையாக தற்போதும் இந்த நெட்டி மாலை தயாரிப்பு தொழிலை கைவிடாமல் செய்து வருகின்றனர்.
நெட்டி மாலை தயாரிப்புக்கு என மூன்று மாதங்களுக்கு முன்பே ஆந்திரா, பாண்டிச்சேரி,பின்னத்தூர் ஏரி, வீராணம் ஏரி உள்ளிட்ட பல்வேறு ஏரி பகுதிகளில் தண்ணீரில் மூழ்கி நெட்டி செடிகள் மற்றும் தாழை நாற்களை

சேகரித்து வந்து பதப்படுத்தி,அளவாக நறுக்கி,சாயம் நனைத்து,வண்ண வண்ண இயற்கையான மனிதர்களுக்கும்.
கால்நடைகளுக்கும் தீங்கு இல்லாத நெட்டி மாலைகளை தயாரித்து குறைந்த விலைக்கு விற்பனை செய்து வருகிறார் இவர் கூறுகையில் மூலப் பொருட்களின் விலை உயர்வு மற்றும் மினுமினுக்கும் பிளாஸ்டிக் மாலைகளின் வரவால் நெட்டி மாலைகளின் வியாபாரம் மந்தமடைந்துள்ளது நெட்டி மாலை தயாரிக்கும்.


தங்களுக்கு தமிழக அரசு குறைந்த வட்டியிலான கடன் உதவி வழங்க வேண்டும் எனவும் தமிழக மக்கள் தீங்கிழைக்கும் பிளாஸ்டிக் மாலைகளை கால்நடைகளுக்கு அணிவிக்காமல் இயற்கையாக தாங்கள் தயாரிக்கும் நெட்டி மாலையை வாங்கி உபயோகப்படுத்தி தங்களது வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என்றனர்.


