மணக்குடி சக்திபுரிஸ்வரர் கோயிலில் தருமபுரம் ஆதீனகர்த்தர் சிறப்பு வழிபாடு
தனுர் (மார்கழி) மாத சிறப்பு வழிபாடு மணக்குடி சக்திபுரிஸ்வரர்
கோயிலில் தருமபுரம் ஆதீனகர்த்தர் சிறப்பு வழிபாடு மேற்கொண்டார்.
மயிலாடுதுறையில் பழைமை வாய்ந்த தருமபுரம் ஆதீனத் திருமடம் அமைந்துள்ளது. இந்த ஆதீனத்தின் 27-வது குருமகா சந்நிதானமாக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் அருளாட்சி செய்து வருகிறார்.
இவர் தனுர் மாதமான மார்கழி மாதத்தின் அனைத்து நாள்களிலும் பல்வேறு கோயில்களில் வழிபாடு நடத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
அந்த வகையில்,தனுர் (மார்கழி) மாதப் வழிபாடு இன்று மயிலாடுதுறை அருகே மணக்குடியில் அமைந்துள்ள தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான சக்திபுரிஸ்வரர் மற்றும் நல்லநாயகி அம்மன் ஆலயங்களில் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் சிறப்பு வழிபாடு மேற்கொண்டார்.

அவருடன் ஆதீனக் கட்டளை ஸ்ரீமத் சுப்பிரமணிய தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பு வழிபாடு மேற்கொண்டனர்.


