அரசுக்குப் படங்களைத் தடை செய்யும் அதிகாரம் இல்லை… பிரகாஷ் ராஜ்
தைரியமாக கருத்துக்ககளை பதிவிடுவதிற்கு அஞ்சாதவர் நடிகர் பிரகாஷ் ராஜ், ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரில் நடந்த கொடூரமான பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தான் நடிகர் ஃபவாத் கான் (Fawadkhan) மற்றும் வாணி கபூரின் ‘அபிர் குலால்’ படம் இந்தியாவில் வெளியிட அனுமதிக்கப்படாதது குறித்து பிரகாஷ் ராஜ் மனம் திறந்து பேசினார்.
‘அபீர் குலால்’ படத்தை ஆர்த்தி எஸ். பாக்ரி இயக்கியுள்ளார். மே 9 அன்று படம் வெளியாக இருந்தது.
குழந்தைகள் துஷ்பிரயோகம் அல்லது ஆபாசத்தை ஊக்கும் படங்களைத் தடை செய்வதை நான் எதிர்ப்பவன் அல்ல. ‘பத்மாவத்’, ‘பதான்’, ‘எல்2: எம்பூரான்’ இந்தியாவில் பொதுமக்களின் கோபத்தை மீறி தடை செய்யப்பட்ட இந்த படங்கள் வெளியாகி வெற்றிபெறவில்லையா? “எந்தவொரு படத்தையும் தடை செய்வதற்கு நான் ஆதரவளிக்கவில்லை, ஏன் ஒரு படத்தை நிறுத்த வேண்டும்? மக்கள் முடிவு செய்யட்டும்” மக்களிடையே பயத்தை உருவாக்க விரும்புகிறார்கள்.
இது கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது என்றும் கூறினார்.
படத்தை தடை செய்தவது தவறு என்றும், அரசுக்குப் படங்களைத் தடை செய்யும் அதிகாரம் இல்லை என்றும் கருத்து தெரிவித்தார்.
மேலும் பாகிஸ்தான் கலைஞர்களின் இன்ஸ்டாகிராம் கணக்குகள் இந்தியாவில் முடக்கப்பட்டு உள்ளது இதனால் இரு நாடுகளுக்குகிடையே போர் ஏற்படுமா? என்ற கவலை மக்களிடையே ஏற்பட்டுள்ளது.