பாலியல் தொந்தரவு செய்த குற்றவாளிகள் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்
தஞ்சை மாவட்டம் பாபநாசம் பகுதியில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது…..
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா பாபநாசம் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் கடந்த 12.05.2025-ம் தேதி பாபநாசம் தாலுக்கா ராஜகிரியைச் சேர்ந்த 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ஆச்சி நகர் ராஜகிரி, பாபநாசம் முகவரியைச் சேர்ந்த பாட்சா (எ) மஹாபு பாட்சா (வயது-54) என்பவர் மீது சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் பாபநாசம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து மேற்படி குற்றவாளி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் உட்கோட்டம் அய்யம்பேட்டை காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் கடந்த 17.05.2025-ம் தேதி அய்யம்பேட்டை அண்ணாநகரைச் சேர்ந்த 9 வயது சிறுமியிடம் அண்ணாநகர், சக்கராப்பள்ளி, அய்யம்பேட்டை முகவரியைச் சேர்ந்த முத்துகுமார் மகன் விக்னேஷ் (எ) விக்கி (வயது-21) என்பவர் குடித்து விட்டு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் பாபநாசம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து குற்றவாளி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
மேற்படி குற்றவாளிகளான பாட்சா (எ) மஹாபு பாட்சா (வயது-54) மற்றும் விக்னேஷ் (எ) விக்கி (வயது-21) ஆகியவர்களின் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை வேண்டி பாபநாசம் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் முருகவேலு வேண்டுகோளின் படி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் பரிந்துரையின் பேரில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் உத்தரவிட்டதின் படி குற்றவாளிகள் இருவரையும் 13.06.2025-ம் தேதி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.