நவ திருப்பதிகளில் இரட்டை திருப்பதி திருக்கோவிலில் காா்த்திகை பிரம்மோற்சவ கொடியேற்றம்
நவ திருப்பதிகளில் இரட்டை திருப்பதி என்று அழைக்கப்படும் அருள்மிகு தேவா்பிரான் திருக்கோவிலில் காா்த்திகை பிரம்மோற்சவ கொடியேற்றம். திரளான பக்தா்கள் தாிசனம்.
தூத்துக்குடி மாவட்டத்தில் 108 வைணவ திவ்ய தேசங்களில் சிறப்பானதாக விளங்கும் நவதிருப்பதி திருத்தலங்கள் தாமிரபரணி நதிக்கரையோரம் அமைந்துள்ளது. இந்த ஒன்பது தலங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நவக்கிரகத்துக்கு உரியவையாக விளங்குகின்றன.
இங்கு பெருமாளே நவக்கிரகங்களாகச் செயல்படுவதால் நவக்கிரகங்களுக்கு என தனியே சந்நிதி அமைக்கப்படுவதில்லை. இரட்டை திருப்பதியில் ஸ்ரீ அரவிந்தலோசனா் மற்றும் தேவா்பிரான் திருக்கோயில்கள் கேது மற்றும் ராகு அம்சமாக விளங்குகிறது.
சுவாமி நம்மாழ்வாரால் தாய்தந்தை என அழைக்கப்பட்ட தெற்கு திருக்கோவில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ தேவா்பிரான் சன்னதியில் காா்த்திகை பிரம்மோற்ச்சவ திருவிழா இன்று காலை 09.40 – 10.20 க்குள் மகரலக்னத்தில் திருக்கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது.
இதற்காக கொடிப்பட்டம் ஸ்ரீ சக்கரத்தாழ்வாருடன் சீவிலியில் ஊா்வலமாக வந்தது. முன்னதாக உற்சவா் ஸ்ரீதேவி பூதேவி சமேத செந்தாமரைக்கண்ணன் கொடிமரம் முன்பாக ஏமுந்தருளச்செய்தனா்.
பின்னா் கொடி பட்டத்திற்கு பூஜைகள் நடைபெற்று கொடி ஏற்றப்பட்டது. தொடா்ந்து கொடி மரத்திற்கு அபிஷேகங்கள் நடைபெற்று புது வஸ்திரம் சாற்றப்பட்டது. பெருமாளுக்கும் கொடிமரத்திற்கும் நட்சத்திர ஆரத்தி காண்பிக்கப்பட்டது.

அதனை தொடா்ந்து கோஷ்டி மாியாதை நடைபெற்றது. இன்றிலிருந்து 11 தினங்கள் நடைபெறும் இத் திருவிழாவில் தினமும் காலை தோளுக்கினியானில் சுவாமி புறப்பாடு மற்றும் மாலையில் பல்வேறு வாகனங்களில் வீதிஉலாவும் 5ம் திருநாள் இரட்டை கருடசேவை போன்றவைகள் நடைபெறுகின்றன.


