சுதந்திர தின விழாவையொட்டி காவல் துறை மற்றும் பள்ளி மாணவ மாணவிகளின் இறுதி அணிவகுப்பு ஒத்த்திகை
புதுச்சேரியில் ஆகஸ்ட் 15-ம் தேதி நடைபெற உள்ள சுதந்திர தின விழாவையொட்டி கடற்கரை சாலையில் காவல் துறை மற்றும் பள்ளி மாணவ மாணவிகளின் இறுதி அணிவகுப்பு ஒத்த்திகை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
புதுச்சேரியில் வருகிற 15-ம் தேதி நாட்டின் 79-வது சுதந்திர தினவிழா கடற்கரை சாலை காந்தி சிலை முன்பு நடைபெற உள்ளது. இதனைமுன்னிட்டு சுதந்திர தினவிழா இறுதி அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி இன்று கடற்கரை சாலை காந்தி சிலை முன்பு நடைபெற்றது.
இதில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள், காவல்தறையினர், தேசிய மாணவர்படை மாணவர்களின் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி கலந்துகொண்டு ஒய்யாரமாக வீறுநடைபோட்டு சென்றனர்.
அதனை தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன. மேலும் அப்பகுதியை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

சுதந்திர தினத்தையொட்டி புதுச்சேரி மாநிலம் மற்றும் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெறும் கடற்சாலையில் ட்ரோன்கள் பறக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது.


