ரசிகர்களோட ஏகோபித்த ஆதரவோட ‘மாய பிம்பம்’ படம்
ரசிகர்களோட ஏகோபித்த ஆதரவோட ‘மாய பிம்பம்’ படம் இப்போ 2-வது வாரத்துல வெற்றிகரமா அடி எடுத்து வச்சிருக்கு.
இதைப் பார்த்துட்டு இயக்குநர் சுரேந்தர் பத்திரிகையாளர்களிடம் பேசினாரு. “இப்போ இருக்குற காதல் எல்லாம் பாஸ்ட் புட் மாதிரி டக்குனு வந்து டக்குனு போயிடுது.
ஆனா 2005-ல, மொபைல் போன் அவ்வளவா இல்லாத காலத்துல காதல் ரொம்ப ஆழமா இருந்தது. அந்த அழுத்தமான காதலையும், அழகான ஃப்ரெண்ட்ஷிப்பையும் சொல்லணும்னு தான் இந்தக் கதையை எடுத்தேன்.”
“இதுல காமெடி, குடும்ப சென்டிமென்ட்னு எல்லாமே இருக்கு. அதனாலதான் குடும்பம் குடும்பமா வந்து ரசிகர்கள் படத்தைப் பாக்குறாங்க.
“இயக்குநர் சுரேந்தர் தன்னோட சினிமா பயணத்தைப் பத்தி சொல்லும்போது: “நான் பி.எஸ்சி அக்ரி படிச்சிருந்தாலும், சின்ன வயசுல இருந்தே எனக்கு சினிமா தான் உசுரு.
எப்படியாவது ஒரு படம் எடுக்கணும்ங்கிறது என்னோட பெரிய கனவு.” “நிறைய படங்கள்ல அசிஸ்டென்ட் டைரக்டரா, அசோசியேட்டா வேலை செஞ்சுட்டு, இப்போ இந்த ‘மாய பிம்பம்’ மூலமா இயக்குநரா ஆகியிருக்கேன். என் சொந்த ஊர் கடலூர். அதனால கதையை கடலூர் மற்றும் சிதம்பரம் ஏரியாவுல தான் படமாக்கியிருக்கேன்.”
“படத்துக்கு வர்ற விமர்சனங்கள் எல்லாம் ரொம்ப சந்தோஷமா இருக்கு. எல்லாரும் ஓடிடி-ல வரும்னு வெயிட் பண்ணாம, தியேட்டருக்கு வந்து பாருங்க.
அப்போதான் எங்கள மாதிரி சின்ன படங்களை எடுக்கிறவங்களுக்கு அது பெரிய ஊக்கமா இருக்கும்,” அப்படின்னு சுரேந்தர் கேட்டுக்கிட்டாரு.

