“சிவகார்த்திகேயன் கூட சேர்ந்து நடிக்க வைக்கிறோம் மாணவிகளை ஏமாற்றும் படக்குழு
ஹைதராபாத்ல இருக்குற ஒரு மகளிர் கல்லூரியில (கோட்டி மகளிர் கல்லூரி), நம்ம சிவகார்த்திகேயன் நடிச்சுட்டு இருக்குற ‘பராசக்தி’ படத்தோட சூட்டிங் நடந்துட்டு இருக்கு.
இப்போ அங்க ஒரு பெரிய பிரச்சினை வெடிச்சிருக்கு! படக்குழுவுல இருக்குற சில பேரு, அங்க படிக்கிற மாணவிகள்கிட்ட தப்பா நடந்துகிட்டதா ஒரு புகார் கிளம்பியிருக்கு.
“சினிமாவுல நடிக்க வாய்ப்பு தர்றோம்”, “சிவகார்த்திகேயன் கூட சேர்ந்து நடிக்க வைக்கிறோம்“னு ஆசை வார்த்தை சொல்லி, சில மாணவிகள்கிட்ட படக்குழுவினர் அநாகரீகமா நடந்துகிட்டதா சொல்லப்படுது.
இது சம்பந்தமா இப்போ ‘X’ (ட்விட்டர்) தளத்துல ஒரு வீடியோ பயங்கர வைரலாகிட்டு இருக்கு. அதுல பாதிக்கப்பட்ட ஒரு மாணவி, தங்களுக்கு நடந்த கசப்பான விஷயங்களை கண்ணீரோட விவரிக்கிறாங்க.
இதைப் பார்த்துட்டு எல்லாரும் அதிர்ச்சியாகிட்டாங்க. இந்த விஷயம் பூதாகரமான உடனே, சம்பந்தப்பட்டவங்க மேல உடனே நடவடிக்கை எடுக்கணும்னு சொல்லி மாணவிகளும், மாணவர் அமைப்புகளும் சேர்ந்து போராட்டத்துல இறங்கியிருக்காங்க.
“படிக்கிற இடத்துலயே இப்படி நடந்தா எங்களோட பாதுகாப்பு என்ன?“னு பெற்றோர்களும் ரொம்ப கவலை தெரிவிக்கிறாங்க. இந்த இவ்வளவு பெரிய சர்ச்சை ஓடிட்டு இருந்தாலும், இதுவரைக்கும் சிவகார்த்திகேயன் தரப்போ இல்ல படக்குழுவோ எந்த விளக்கமும் கொடுக்கல. சோசியல் மீடியால இது காட்டுத்தீயா பரவி வர்றதால, சீக்கிரமே போலீஸ் விசாரணை நடக்கும்னு எதிர்பார்க்கப்படுது.


