பார்க்கிங்..கில் ஆரம்பிச்ச சண்டை இன்னும் முடியலையா..??
நடிகர் ஹரி கிருஷ்ணன் மற்றும் எம் எஸ் பாஸ்கர் நடிப்பில் ராம் குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளியான பார்க்கிங் படம் மூன்று தேசிய விருதுகளை பெற்றுள்ளது.
வெவ்வேறு தலைமுறைகளைச் சேர்ந்த இரண்டு அண்டை வீட்டாருக்கு இடையிலான உறவையும் சுயமரியாதை மற்றும் சுய முக்கியத்துவம் ஆகியவை ஒருவரின் ஈகோவை எப்படி அசைக்கிறது என்பதை இயக்குனர் அழகாக சித்தரித்திருகிறார்.
கார் பார்கிங்..கிற்காக ஆரம்பிக்கும் இவர்களின் சாதாரண சண்டை கொலை செய்யும் அளவிற்கு இவர்களை தூண்டுகிறது விவேகம் இல்லாமல் உணர்ச்சிவசப்படும் இன்றைய தலைமுறைக்கு ஏற்ற படம் பார்க்கிங்.
சிறந்த படத்திற்கான விருதை பார்க்கிங் படத்திற்கும் சிறந்த துணை நடிகருக்கான விருதை நடிகர் எம்எஸ் பாஸ்கருக்கும் பெஸ்ட் Screenplay Award…டை டைரக்டர் ராம் பாலகிருஷ்ணாவும் பெற்று இருக்கின்றனர்.
பார்க்கிங் படத்திற்கு விருதுகள் கிடைத்த மகிழ்ச்சியை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர் .
இந்த மகிழ்ச்சியான தருணத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படத்தை பட குழுவினர் x தளத்தில் வெளியிட்டுள்ளனர்.


