கானூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ செல்லியம்மன் கோவில் பத்தாம் ஆண்டு திருவிளக்கு பூஜை
தை மாத பௌர்ணமி மற்றும் தை பூசத்தை முன்னிட்டு நடைபெற்ற விளக்கு பூஜையில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி வழிபாடு
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே கானூர் கிராமம் இருந்து வருகிறது. இந்த கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ செல்லியம்மன் கோவிலில் பத்தாம் ஆண்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

தை மாத பௌர்ணமி மற்றும் தைப்பூசத்தை முன்னிட்டு நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அலங்கரித்து வைக்கப்பட்ட ஸ்ரீ செல்லியம்மன் முன்பாக அமர்ந்து நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் திருவிளக்கு தீபமேற்றி உலகம் அமைதி பெறவும், விவசாயம் செழிக்கவும், மாங்கல்ய பலம் பெற்றிடவும், சகல சௌபாக்கியங்கள் வேண்டிய வேண்டி பல்வேறு வேண்டுதல்களை வைத்து ஸ்ரீ செல்லியம்மனை மனமுருக வேண்டி திருவிளக்கு பூஜை வழிபாடு நடத்தினர்.
பின்னர் ஸ்ரீ செல்லியம்மனுக்கு மஹா தீபாரதனை கட்டப்பட்டு பக்தர்களுக்கு கோவில் பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் கானூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று ஸ்ரீ செல்லியம்மனை மனமுருக வேண்டி வழிபட்டும் சென்றனர்.


