77 வது குடியரசு தினத்தை முன்னிட்டு நெல்லை பாளையங்கோட்டை வ உ சி மைதானத்தில் நடைபெற்றது.
77- வது குடியரசு தினம் நாடுமுழுதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.இதனை முன்னிட்டு நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் பாளையங்கோட்டை வ உ சி மைதானத்தில் நடந்த குடியரசு தின விழா நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் சுகுமார் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.

அதனை தொடர்ந்து காவல்துறை, தீயணைப்புத்துறை, ஊர்காவல்படை, வனத்துறை, தேசிய மாணவர் படையினர் ஆகியோர் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து மூவர்ண பலுனையும் பறக்கவிட்டார். பின்னர் காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய 113 காவலர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் பதக்கங்களையும், அரசுதுறையில் சிறப்பாக பணியாற்றிய அரசு வழக்கறிஞர் உள்பட 446 பேருக்கு நற்சான்றுகளையும் வழங்கினார்.
இதனையடுத்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, முன்னாள் படைவீரர் நலத்துறை, வேளாண் மற்றும் உழவர் நலத்துறை, சமூக நலத்துறை உள்ளிட்ட 8 அரசு துறைகள் சார்பில் 33 பயனாளிகளுக்கு 34 லட்சத்து 48 ஆயிரம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.

விழாவின் சிறப்பு நிகழ்வாக மாணவ மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது . விழாவில் மாநகர காவல் ஆணையர் மணிவண்ணன், நெல்லை சரக டிஐஜி சரவணன், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரசன்னகுமார், மாநகர காவல்துறை துணை ஆணையர்கள் விநோத்சாந்தாராம், மதன் மற்றும் அரசுதுறை அதிகாரிகள் , பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்
