in

நஞ்சில்லா நாட்டு காய்கறி விற்பனையை உழவர் சந்தையில் தொடக்கி வைத்த மாவட்ட ஆட்சியர்…..

நஞ்சில்லா நாட்டு காய்கறி விற்பனையை உழவர் சந்தையில் தொடக்கி வைத்த மாவட்ட ஆட்சியர்…..

 

திருவண்ணாமலை நகரம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உழவர் சந்தை இயங்கி வருகிறது. இந்த உழவர் சந்தையில் மொத்தம் 109 கடைகள் உள்ளது.

இந்த உழவர் சந்தையில் அனுதினமும் விவசாயிகள் தங்கள் விளை நிலத்தில் விளைந்த கத்தரிக்காய், வெண்டைக்காய், பீர்க்கங்காய், பொடலங்காய், அவரைக்காய் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகளையும், சிறு கீரை, அரை கீரை, பொன்னாங்கண்ணி கீரை, மனத்தக்காளி கீரை, பால கீரை மற்றும் பல்வேறு வகையான பழங்களை விற்பனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் நஞ்சில்லா நாட்டு காய்கறி விற்பனையை ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். இதனை தொடர்ந்து உழவர் சந்தையில் உள்ள காய்கறி கடைகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

குறிப்பாக இயற்கை முறையில் விவசாயம் செய்து ஆரோக்கியமான காய்கறிகளை மக்களுக்கு வழங்க வேண்டும் என்று விவசாயிகளுக்கு தெரிவித்தார்.

What do you think?

Admiral X: реальные отзывы и почему стоит внимания

‘புலி’ பட பிரச்சனைக்கு 1.5 கோடி ரூபாய் அபராதம்