in

‘ஜனநாயகன்’ ‘மறுஆய்வுக் குழு’ மூலமா சர்டிபிகேட் வாங்க முயற்சி

‘ஜனநாயகன்’ ‘மறுஆய்வுக் குழு’ மூலமா சர்டிபிகேட் வாங்க முயற்சி

 

விஜய் நடிச்சிருக்கிற இந்தப் படத்துக்கு ஆரம்பத்துல இருந்தே ஏகப்பட்ட செக் வச்சுட்டு இருக்காங்க.

இப்போ நிலைமை இன்னும் சிக்கலாகியிருக்கு. படம் பொங்கலுக்கு (ஜனவரி 9) வர வேண்டியது. ஆனா, சென்சார் போர்டு “நாங்க சர்டிபிகேட் தரமாட்டோம், இதை மறுஆய்வுக் குழு (Revising Committee) பாக்கணும்”னு சொல்லி தள்ளி வச்சாங்க.

இதை எதிர்த்து தயாரிப்பு நிறுவனம் ஹைகோர்ட்டுக்கு போனாங்க. நீதிபதி பி.டி.ஆஷா, “அதெல்லாம் முடியாது, உடனே சான்றிதழ் குடுங்க”ன்னு சொல்லி ஜனவரி 8-ம் தேதி அதிரடி தீர்ப்பு கொடுத்தாங்க.

தனி நீதிபதி சொன்ன அடுத்த நிமிஷமே சென்சார் போர்டு மேல்முறையீடு (Appeal) பண்ணாங்க. தலைமை நீதிபதி அமர்வு அந்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிச்சுட்டாங்க. இதனால பொங்கலுக்கு படம் வர முடியாம போச்சு.

தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவத்சவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் இப்போ ஒரு முக்கியமான தீர்ப்பை சொல்லிருக்காங்க: “உடனே சான்றிதழ் குடுங்க”ன்னு தனி நீதிபதி சொன்ன உத்தரவை இப்போ முழுசா ரத்து செஞ்சுட்டாங்க.

“தயாரிப்பு நிறுவனம் மறுபடியும் புதுசா ஒரு வழக்கை தாக்கல் பண்ணனும். அதைத் தனி நீதிபதி திரும்பவும் முறையா விசாரிக்கணும்”னு சொல்லிட்டாங்க. அதாவது, கேஸ் இப்போ ‘பழையபடி’ ஆரம்பத்துக்கே போயிருச்சு.இந்தத் தீர்ப்பால ‘ஜனநாயகன்’ ரிலீஸ் ஆகுறது இன்னும் தள்ளிப்போகும்.

கேவிஎன் (KVN) நிறுவனம் இப்போ ரெண்டு வழிகளை யோசிக்குறாங்க: இந்தத் தீர்ப்பை எதிர்த்து அடுத்த கட்டத்துக்குப் போறது. தணிக்கை வாரியம் சொல்ற மாதிரி ‘மறுஆய்வுக் குழு’ மூலமா சர்டிபிகேட் வாங்க முயற்சிக்குறது. இது பத்தின இறுதி முடிவை அவங்க இன்னைக்கு எடுப்பாங்கன்னு தெரியுது.

What do you think?

திருவாடானை கோவில் முன்பு சீர் ஏற்றி வந்த வேனை நடுரோட்டில் நிறுத்தியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படட்டு.  

தேர்தலில் போட்டியிட விசில் சின்னம் அறிவித்ததை தொடர்ந்து தவெக சார்பில் விசில் அடித்து ஊதி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்