in

ஆறடி அசுரனாய் வந்த முதலை, அடக்க முயன்ற இளைஞர்கள்…

ஆறடி அசுரனாய் வந்த முதலை, அடக்க முயன்ற இளைஞர்கள்…

 

பிடிக்க முயன்ற இளைஞரை பாய்ந்து கடித்த முதலையின் அடங்கா வெறி…

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அடுத்த விருப்பாட்சி ஊராட்சி பொட்டவெளி கிராம வயல் வெளியில் இரவு நேரத்தில் உலா வந்த ஆறடி முதலையால் அப்பகுதி பரபரப்புக்கு உள்ளானது.

ஆறடி அசுரன் போல வயல் வெளியில் கெத்து காட்டி உலா வந்த முதலையை கண்ட இளைஞர்கள் குறிஞ்சிப்பாடி போலிசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் அடிபடையில் சம்பவ இடத்திற்கு வந்த குறிஞ்சிப்பாடி காவல்துறை ஆய்வாளர் மோகன் அய்யர் மற்றும் போலிசார் கிராம பொதுமக்களோடு முதலையை பிடிக்க முயன்றனர்.

அப்பொழுது வெறி அடங்காத ஆறடி உயரமும் சுமார் அறுபது கிலோ எடையும் கொண்ட முதலை தன்னை பிடிக்க வந்தவர்களை வெறி கொண்டு தாக்கி கடிக்க முயன்ற போது பரசுராமன் என்ற இளைஞரின் காலை கடித்து காயபடுத்தியது.

சுதாகரித்து கொண்ட அந்த இளைஞர் நூலிழையில் சுதாகரித்து முதலையிடம் இருந்து தப்பித்து கொண்டார்.

அப்பொழுது முதலையை விட வெகுண்டு எழுந்த இளைஞர்கள் முதலையினை மீன் பிடி வலைகள் மூலமாகவும், சாக்கு பைகளை கொண்டும் ஒரு வழியாக போராடி முதலையனை பிடித்தனர்.

மேலும் பிடிக்கப்பட்ட முதலையை குறிஞ்சிப்பாடி தீயணைப்பு துறையினரை வரவழைத்து அவர்கள் மூலமாக வனத்துறையினர் வசம் ஒப்படைக்கப்பட்டது.

மேலும் இரவு நேரத்தில் முதலை வயல் வெளிகளில் உலா வந்தது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

What do you think?

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு வீழ்ப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் துவக்கி வைத்தார்

அண்ணாமலைப் பல்கலைக்கழக பேராசிரியர்கள் 5வது நாளாக உள்ளிருப்பு போராட்டம்