in

போலியான பக்தியுடன் மக்களை மத ரீதியாக பிளவுபடுத்த நினைக்கிறது பாஜக.

போலியான பக்தியுடன் மக்களை மத ரீதியாக பிளவுபடுத்த நினைக்கிறது பாஜக.

முருக பக்தர்கள் மாநாடு என்ற பெயரில் போலியான பக்தியுடன் மக்களை மத ரீதியாக பாஜக பிளவுபடுத்த நினைக்கிறது.

தமிழ்நாட்டில் நாங்கள் அன்பை விதைக்கின்றோம், ஒருபோதும் தமிழ்நாட்டில் ஜாதி மத ரீதியாக பிளவுபடுத்த முடியாது. மயிலாடுதுறையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சுதா பேச்சு.

நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் பிறந்தநாள் விழா இன்று நாடு முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறையில் ரத்ததான முகாம் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்றது. இதனை துவக்கி வைத்த பின்னர், மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகே காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜ்குமார் மற்றும் மயிலாடுதுறை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி ஆர்.சுதா ஆகியோர் பங்கேற்று பேசினர்.

நிகழ்ச்சியில் பேசும்பொழுது தமிழ்நாட்டில் மாணவர்களுக்கான கல்வி உரிமைத் தொகையினை பெற்று தருவதற்கு பாரதிய ஜனதா கட்சியினருக்கு மனது இல்லை. ஆனால், முருக பக்தர்கள் மாநாடு என்ற பெயரில் போலியான மாநாடு நடத்தப் போகிறார்கள்.

தமிழ்நாட்டில் ஜாதி மத ரீதியான பிளவுபடுத்தும் பாரதிய ஜனதா கட்சியின் திட்டம் பலிக்காது. நாங்கள் அன்பை விதைக்கிறோம், பிரதமர் மோடி வெறுப்பை விதைக்கிறார். தமிழ்நாட்டின் மீது அக்கறை இருந்தால் முதலில் கல்விக்கான நிதியை பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் பெற்றுத் தர முன்வர வேண்டும் என்று பேசினார். ஏராளமான காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

What do you think?

இனி கவர்ச்சியாக நடிக்க மாட்டேன்

நாளை வெளியாகும் திரைபடங்கள்