திமுகவிற்கு சாதகமாக செயல்படும் மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் மதுரை மாநகர காவல் ஆணையர் ஆகிய இருவரையும் பணியிட மாற்றம் செய்யக்கோரி பாஜக சார்பில் தலைமை தேர்தல் ஆணையருக்கு கடிதம்.
மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் ஆகிய இருவரும் திமுகவிற்கு சாதகமாக இந்த தேர்தலில் செயல்படுவார்கள்.
என்பதால் இவர்கள் இருவரையும் மாற்ற வேண்டும் என பாரதிய ஜனதா கட்சியின் மதுரை மாநகர் மாவட்ட அறிவு சார் பிரிவின் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் ஜெயசிங் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தமிழக தலைமை தேர்தல் ஆணையர் ஆகியோருக்கு விரைவு தபால் மூலம் கடிதம் அனுப்பி உள்ளார்.
மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் மதுரை மாநகர காவல் ஆணையர் ஆகிய இருவரும் திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை நடைமுறை ப்படுத்தாதது மற்றும் திமுக அரசிற்கு இருவரும் சாதகமாக செயல்பட்டவர்கள் என்பது மதுரை மக்களுக்கும் தமிழக மக்களுக்கும் தெரியவரும் எனவும் நேர்மையான முறையில் தேர்தல் நடைபெற வேண்டும் என்றால், இவர்கள் இருவரையும் பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது குறித்து பேட்டியளித்துள்ள ஜெயசிங் கூறியதாவது,
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தாமல் 144 தடை உத்தரவு பிறப்பித்து திமுகவிற்கும் அமைச்சர்களுக்கும் சாதகமாக மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார்.
செயல்பட்டார் எனவும் மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையிலும் உரிய பாதுகாப்பு வழங்காமல், நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த விடாமல் தடுத்தார் எனவும், இவர்கள் இருவரும் மதுரை மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டால் தேர்தல் தொடர்பான ரகசியங்களை திமுக தலைமைக்கும் அதன் அமைச்சர்களுக்கும் வழங்கி திமுக வெற்றி பெற சாதகமாக செயல்படுவார்கள் என குற்றச்சாட்டை முன்வைத்து உள்ளார்.
ஆகவே மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் ஆகிய இருவரையும் பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தமிழக தலைமை தேர்தல் ஆணையர் ஆகிய இருவருக்கும் கடிதம் அனுப்பி உள்ளதாக தெரிவித்துள்ளார்.
பேட்டி ஜெயசிங் பாரதிய ஜனதா கட்சி மதுரை மாநகர் மாவட்ட அறிவு சார் பிரிவு தலைவர்

