in

1000 ஆண்டு பழமை வாய்ந்த வேடியப்பன் கோவில் வருஷாபிஷேகம்

1000 ஆண்டு பழமை வாய்ந்த வேடியப்பன் கோவில் வருஷாபிஷேகம்

 

1000 ஆண்டு பழமை வாய்ந்த வேடியப்பன் கோவில் வருஷாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது…..

திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்…..

திருவண்ணாமலை அடுத்த சகாய நகர் பகுதியில் உள்ள 1000 ஆண்டு பழமை வாய்ந்த வேடியப்பன் கோவிலில் வருஷாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருவண்ணாமலை அடுத்த சகாய நகர் பகுதியில் 1000 ஆண்டு பழமை வாய்ந்த வேடியப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு கடந்த ஆண்டு கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

கும்பாபிஷேகம் நடந்து ஒரு வருடத்தை கடந்த பின்னர் இன்று வேடியப்பன் கோவிலில் வருஷாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

வேடியப்பன் கோவிலில் யாக சாலைகள் அமைக்கப்பட்டு கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, யாகசாலை பூஜைகள் உள்ளிட்ட பல்வேறு யாகங்கள் செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து யாக சாலையில் பூர்ணாகதி நடைபெற்றது. இந்த வருஷாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

What do you think?

வடலுார் அடுத்த மேட்டுக்குப்பத்தில் வள்ளலார் சித்தி பெற்ற, சித்தி வளாகத் திருமாளிகையில், திருஅறை தரிசனம்

ஸ்ரீசெல்லியம்மன் கோவிலில் தை மாத விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு நடைபெற்ற ஸ்ரீ செல்லியம்மன் ஊஞ்சல் தாலாட்டு உற்சவம்