in

மாஞ்சோலைத் வசிக்கும் தொழிலாளர்களுக்குத்அடிப்படை வசதிகள் குறித்து அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் நேரில் மக்களைச் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தனர்.

மாஞ்சோலைத் வசிக்கும் தொழிலாளர்களுக்குத்அடிப்படை வசதிகள் குறித்து அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் நேரில் மக்களைச் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தனர்.

திருநெல்வேலி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மாஞ்சோலைத் தேயிலைத் தோட்டங்களில் வசிக்கும் தொழிலாளர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் குறித்து அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் மற்றும் அதிகாரிகள் நேரில் மக்களைச் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தனர்.

மேற்குத் தொடர்ச்சி மலை அம்பாசமுத்திரம் வட்டத்திற்குள்பட்ட களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக வனப்பகுதியில் செயல்பட்டு வந்த பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷனுக்குச் சொந்தமான தேயிலைத் தோட்டங்களில் அந்தநிறுவனம் பணிகளை கடந்த ஆண்டு நிறுத்தியதோடு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த தொழிலாளர்களுக்கு விருப்ப ஓய்வு மற்றும் கருணைத் தொகை கொடுத்து வெளியேற்றினர்.

இதையடுத்து தேயிலைத் தோட்டப் பகுதியில் வசித்து வந்த தொழிலாளர்களில் பலர் அங்கிருந்து இடம் பெயர்ந்து நகர்ப்புறங்களில் தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்டனர்.

    இந்நிலையில் 2028ஆம் ஆண்டு வரை குத்தகைக் காலம் உள்ளதாகவும் அதுவரை வனப்பகுதியில் உள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேற மாட்டோம் என்று கூறி சுமார் 25 குடும்பத்தினர் தோட்டப் பகுதியிலேயே வசித்து வருகின்றனர்.
இதனிடையே வனப்பகுதியில் வசித்து வரும் மக்கள் தங்களுக்குரிய அடிப்படை வசதிகளான போக்குவரத்து, தண்ணீர், ரேஷன், மின்சாரம் உள்ளிட்டவற்றை அரசு நிறுத்திவிட்ட்தாகவும் உடனடியாக அடிப்படை வசதிகளை செய்து தர உத்தரவிட வேண்டுமென்றும் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்தனர்.

அந்த வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் உடனடியாக தேயிலைத் தோட்டப் பகுதியில் வசிக்கும் மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும் என்றும் அதுகுறித்து இரண்டு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

இதையடுத்து அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் வைகுண்டம் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் மாஞ்சோலை, ஊத்து மற்றும் நாலுமுக்கு ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்களிடம் நேரில் சென்று அவர்களது தேவைகள் குறித்து கேட்டறிந்தனர்

அவரிடம், ஒரு முறை மட்டும் இயங்கும் பேருந்தை இரண்டு முறை இயக்க வேண்டும், குடிநீர் வசதி செய்து தரவேண்டும், ரேஷன் பொருட்கள் இங்கேயே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், பொங்கல் பரிசுத் தொகையும் வழங்க வேண்டும், மின்சார வசதி செய்து வரவேண்டும் உள்ளிட்ட தேவைகளை செய்து தரக் கோரினர்.

What do you think?

அம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது

வேப்பூர் அருகே மின்வேலியில் சிக்கி விவசாயி பலி