தூத்துக்குடியில் பேரறிஞர் அண்ணாவின் 57வது நினைவு தினம்
தூத்துக்குடியில் வடக்கு மாவட்ட திமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 57வது நினைவு தினத்தை முன்னிட்டு பேரறிஞரின் அண்ணாவின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தூத்துக்குடி ராஜாஜி பூங்கா முன்பிருந்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சருமான கீதா ஜீவன் தலைமையில் அமைதிப் பேரணியாக வருகை தந்து தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள பேரறிஞர் அண்ணாவின் திருஉருவ சிலைக்கு அமைச்சர் கீதா ஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
தொடர்ந்து பேரறிஞர் அண்ணாவை வாழ்த்தி கோஷங்கள் எழுப்பி , இந்தி திணைப்புக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி ஹிந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம் தமிழுக்கு உறுதுணையாக இருப்போம் என உறுதிமொழி எடுக்கப்பட்டது.


